பாரதியார் பாடல் தடை செய்யப்பட்டு இருந்த காலம் அது . பாரதியார் பாடலை பயன்படுத்தியவர்களும் கூட பாரதியார் என்ற பெயரை மறைத்து விட்டு வேறு பெயரில் பாரதியார் பாடல்களைப் பயன்படுத்தி வந்தார்கள்.
பாரதியார் பாடல் முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஒலித்தது 1935இல் மேனகா என்னும் படத்தில். அந்தப்படத்தில் படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் திடீரென்று ஒரு பள்ளிக்கூடக் காட்சியை இணைத்து, பள்ளிக்கூடத்தில் மாணவிகள் ஒரு பாடலை சேர்ந்து பாடுவது காட்டப்பட்டது. அது பாரதியார் பாடல் என்று துணிவோடு குறிப்பிட்டிருந்தனர். பாரதியார் பெயரைக் காட்டியவுடன் மக்கள் கூட்டம் கைதட்டியது.
அந்தப் பாடல், 'வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே' என்ற பாடல். படத்தை தயாரித்தது திருப்பூர் சண்முகானந்தா டாக்கீஸ் கம்பெனியினர். படத்தின் இயக்குனர் பி.கே ராஜா சாண்டோ.
இந்தப்படம் மூலமாகத்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார்.

Comments
Post a Comment
Your feedback