ரா. கனிவிக் I-A
சந்தகையுடன் தேங்காய்பால், தக்காளி குஸ்கா, கொள்ளு ரசம், குளோப்ஜாமூன் இவைகளை எனது அம்மா செய்தால் நான் மிகவும் விரும்பி சுவைப்பேன்.
அ. அல்பியா IV – B
என் அம்மா செய்யும் உணவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் எனக்கு மிகவும் பிடித்தது கலவைச் சாதம். அக்கலவைச் சாதங்களில் எனக்கு மிகவும் பிடித்தது எலுமிச்சைச்சாதம், தயிர்சாதம், புளிச்சாதம்.
தக்காளிச்சாதம் மற்றும் மாங்காய் சாதம் ஆகியவற்றுடன் உருளைக்கிழங்கு மற்றும் ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
வி. சாய் பிரித்விக் III-A
வீட்டில் செய்யும் உணவில் எனக்கு மிகவும்பிடித்தது, பிரியாணி, முட்டை தோசை .
பிரியாணி மிகவும் பிடிக்கக் காரணம், அதன் சுவை, மணம் மற்றும் அதில் உள்ள காய்கறிகள். முட்டை தோசை மிகவும் பிடிக்கக் காரணம், அதில் உள்ள நன்மைகள்.
மித்ரா ஸ்ரீ
எனது அம்மா செய்யும் உணவில் எனக்கு மிகவும் பிடித்த உணவு இட்லி, மற்றும் பணியாரம்.
எனக்கு இந்த இரண்டு உணவுகள் மிகவும் பிடிக்கும். அதில் அம்மா பல விதமாக எங்களுக்கு செய்து தருவார்கள்.
பால் பணியாரம் மற்றும் கொழுக்கட்டை நன்றாகவும். மிகுந்த இனிப்புடனும் இருக்கும். நான் அதை விரும்பி உண்பேன்.
நன்றி
VABUESTHAMI.S, III-A
வீட்டில் செய்யும் உணவில் எனக்கு மிகவும் பிடித்தது குடல் குழம்பும் இட்லியும்.
T. அகிலமுதன்
வீட்டில் செய்யும் உணவில் எனக்கு பிடித்தது - சப்பாத்தி
காரணம்:
• கோதுமையில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது.
• உடலுக்கு சுறுசுறுப்பு தருகிறது.
• நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
• இரும்புச் சத்து நிறைந்தது.
B.J. சங்கமித்ரா
வீட்டில் செய்யும் உணவில் எனக்கு மிகவும் பிடித்த உணவு மட்டன் பிரியாணியுடன் மட்டன் சுக்கா, வெங்காய பச்சடி சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆம் அந்த அளவிற்கு பிடிக்கும். ஞாயிற்றுக்கிழமை அன்று எனது அப்பா, அம்மா, அண்ணனுடன் சேர்ந்து சாப்பிடும் போது சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். நீங்களும் சுவைத்து பாருங்களேன்!!
ANISHA.R, IV-A
என் அம்மாவின் சமையலில் எல்லா வகை உணவுகளும் பிடிக்கும். அதில் எனக்கு ரொம்பவும் பிடித்த உணவு ஒன்றை மட்டும் நான் கூறுவேன்.
அது என்ன வகை உணவென்றால் மிளகு கறி மட்டும் தான் பிடிக்கும். ஏனென்றால், என் அம்மாவைப் போல் யாராலும் செய்யவே முடியாது. இத்துடன் இரசம் சாதம் செய்து தருவார்கள். இது சளி, இருமலுக்கு மிகவும் நல்லது. அம்மா சமையலே ஆரோக்கிய உணவாகும். எனக்கு இந்த உணவை அடிக்கடி செய்து தரக் கேட்பேன்.
YOGESH.M, V-A
வீட்டில் செய்யும் உணவில் எனக்கு பூரி மிகவும் பிடிக்கும். நான் விரும்பிசாப்பிடுவேன்.
உருளைக்கிழங்கு மசால் மிகவும் பிடிக்கும். அதில் வைட்டமின் ‘சி’ உள்ளது. எனக்கு பிடித்த உணவை மகிழ்ச்சியுடன் சுவைப்பேன்.
ச.அ. யாழினி V-A
என் பெயர். ச.அ. யாழினி, நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். ஏன் பள்ளியின் பெயர் விவேகம் பள்ளி, தாராபுரம்.
எங்கள் வீட்டில் செய்யும் உணவில் மிகவும் பிடித்தது எலுமிச்சை சாதம், உருளை கிழங்கு பொரியல், தோசை, மட்டன் குழம்பு விரும்பி சாப்பிடுவேன்.
என் அப்பா செய்யும் மட்டன் குழம்பு மிகவும் பிடிக்கும் . எனக்காக சுவையாக சமைத்து கொடுப்பார்கள். நான் மகிழ்ச்சியாக உண்ணுவேன். என் அம்மா செய்யும் புளிக்குழம்பு பிடிக்கும். நானும் என் தங்கையும் சாப்பிடுவோம். பீட்ரூட், கேரட், அவரைக்காய், முருங்கைக்காய், பீன்ஸ் விரும்பி சாப்பிடுவேன்.
சு. சித்தார்த் ஆதிரையன் V-B
வீட்டில் செய்யும் உணவில் சந்தகை எனக்கு மிகவும் பிடிக்கும்.
DEEKSHANA.S, IV-A
வீட்டில் சமைக்கும் உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்த உணவு கம்மஞ்சோறு. கம்மஞ்சோற்றில் கருவாட்டுக் குழம்பு ஊற்றி சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இரவு கம்மஞ்சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு மறுநாள் தயிர் ஊற்றி வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு உண்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
பா. ஜகத் IV
வீட்டில் செய்யும் உணவில் மிகவும் பிடித்தது தக்காளி சாதம். என் அம்மா செய்யும் உணவுகளில் நான் விரும்பி சாப்பிடுவது புளி சாதம். எலுமிச்சை சாதம் எனக்கு பிடிக்கும். காய் சாதத்தில் என் அம்மா அனைத்து காய்களும்சேர்த்து செய்வதால் எனக்கு பிடிக்கும். முக்கியமாக எனது பிறந்தநாளன்று அம்மா காளான் சாதம் செய்து கொடுத்தார்கள். எனக்கு மிகவும் பிடித்தது.
ரா. சஞ்சய் V-B
வீட்டில் செய்யும் உணவில் எனக்கு மிகவும் பிடித்தது தேங்காய் பருப்பி. எனது அம்மா எனக்காக செய்த தேங்காய் பருப்பி மிகவும் பிடிக்கும். மிகவும் சுவையாக இருந்தது. அது உடலுக்கு மிகவும் நல்ல உணவு.
ர.உ. தீபக் V-A
வீட்டில் செய்யும் உணவில் எனக்கு மிகவும் பிடித்த உணவு
ஊத்தாப்பம். அம்மா அதில் கேரட் மற்றும் வெங்காயம் போட்டு சுட்டுத்தருவார்கள். இது மிகவும் சுவையானதும், ஆரோக்கியமானதும் ஆகும். ஆதலால் இந்த உணவு எனக்கு மிகவும் பிடிக்கும்.
தன்சிகா ஸ்ரீ V-A
வீட்டில் செய்யும் உணவில் எனக்கு பிடித்த உணவு வகைகள்
வாழை பூ பொரியல்
ராகி தோசை, பூண்டு சட்சி
உளுந்து வடை, காளான் பிரியாணி
பிரண்டை துவையல்
சே. லுக்மான் IV
வீட்டில் செய்யும் உணவில் எனக்கு முட்டை சாப்பாடு மிகவும் பிடிக்கும். நான் விரும்பி சாப்பிடுவேன்.
ர. ரிதன் V – A
வீட்டில் செய்யும் உணவில் எனக்கு பிடித்த உணவு எலுமிச்சை சாதம்


வீட்டில் செய்யும் உணவில் எனக்கு பிடித்த உணவு பூரி சப்பாத்தி விரும்பி சாப்பிடுவேன்
ReplyDelete