அந்நாளில் சோமன் என்ற செல்வந்தன் இருந்தான். கருணை உள்ளம் கொண்டவன். தன்னை நாடி வந்த ஏழைகளுக்கு வேலையோ ஆதரவோ அளித்து வந்தான். அவனது வள்ளல் குணத்தைப் பாட விரும்பிய ஔவையார் பாடிய இந்தப்பாடல் என்றும் நிலைத்திருக்கும் பாடல்களுள் ஒன்று.
நிழலின் அருமை வெயிலில் தெரியும். கடவுளின் திருவடிகள் துன்பத்தில் தான் தெரியும். தமிழின் பெருமை திருக்குறளையும் நாலடியாரையும் படித்தால் தான் தெரியும். சோமனின் கொடை அருமை ஏழை மக்களைக் கேட்டால் தெரியும் என்று பொருள்தரும் அந்தப் பாடல் இதுதான்.
நிழல்அருமை வெயிலில் நின்று அறிமின் ஈசன் கழல் அருமை வெவ்வினையின் காண்மின்-பழகுதமிழ்ச்
சொல்லருமை நாலிரண்டில் சோமன் கொடையருமை
புல்லிடத் தேயறிமின் போய்.
இதையே கண்ணதாசன் இன்னும் எளிமையாகக் கூறுவார்.
பசித்த வயிற்றில் உணவு தெய்வம் பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கோடைவெயிலில் நிழலே தெய்வம்
உடைந்த கல்லில் ஒன்று தெய்வம்
ஒன்று கோயில் ஒன்று வாசல்
இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்றே இடத்தைப் பொறுத்தே எதுவும் மாறும்.
Comments