எம். இலக்கியா. V-B
நான் கடைவீதிக்குச் சென்று வந்தேன். அங்கு பூச் செடிகளைப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்த ரோஜா செடியை வாங்கிக் கொண்டேன்.
பின்பு வீட்டிற்கு வந்தேன். அதைப் பார்த்து அம்மா என்னைப் பாராட்டினார்கள். நானும் மகிழ்ச்சி அடைந்தேன்.
K.N. மிருதுளா II-B
எனது பெயர் மிருதுளா. சமீபமாக எனது அம்மாவும், எனது அப்பாவும் நான் நன்றாக விளையாடியதற்காகப் பாராட்டினார்கள். எனக்கு ஓட்டப்பந்தயம் மிகவும் பிடித்த விளையாட்டு. அதில் ஓடி வெற்றி பெற்றமைக்காகப் பாராட்டினார்கள்.
அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்தமைக்காகப் பாராட்டினார்கள்.
நான் நன்றாக படித்தமைக்காகவும் பாராட்டினார்கள்.
நன்றி.
M.S. இந்திரபிரசாத் II – B
நான் ஓவியம் அழகாக வரைந்ததற்காக என் தந்தை என்னைப் பாராட்டினார்கள்; மிகவும் சந்தோசமடைந்தேன்.
மித்ரா ஸ்ரீ
அப்பாவுடன் இன்று எங்களுடைய நான்கு சக்கர வாகனம் சுத்தம் செய்ய உதவி செய்தேன்(கார்). அப்பா என்னைப் பாராட்டினார்கள்.
எனது வீட்டை சுத்தம் செய்ய உதவி செய்தேன். அதற்கு என் அம்மா என்னைப் பாராட்டினார்கள்.
எஸ். ஹர்சிதா III – A
இன்று மதியம் என் அப்பா சாப்பிட வீட்டிற்கு வந்தார்கள். சாம்பார் சாப்பிட்டதும் தயிர் எங்கே என்று கேட்க, அம்மா வீட்டில் தயிர் இல்லை என்றதும் நான் கடைக்கு ஓடிச்சென்று தயிர் வாங்கி வந்ததும் என்னை மிகவும் பாராட்டினார்கள். தேவை அறிந்து உதவி செய்ததால் மகிழ்ந்தனர்.
அ. அணுக்கிரித்தா
எனது வகுப்பின் சிறந்த கையெழுத்தில் நான் தேர்வாகி சான்றிதழ் பெற்றதற்காக என் அம்மா, அப்பா சென்ற வாரம் என்னைப் பாராட்டினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
SELVA NITHISH
சிறந்த கையெப்பம் சான்று வாங்கியதற்கு அம்மா, அப்பா பாராட்டு தெரிவித்தனர். இந்த மாதிரி பாராட்டு அம்மா, அப்பாவிடம் வாங்க நான் நன்றாக எழுத, படிக்க, மேலும் முயற்சி செய்து வருகின்றேன். இந்த பாராட்டுக் கிடைக்கக் காரணமாக இருந்த வகுப்பு ஆசிரியைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
SWATHI KRISHNA.B, III - A
அன்று ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தனர். அப்பொழுது அனைவரும் என்னைப் பாட்டுப் பாடுமாறு கேட்டனர். எனவே நான் அங்கு இருந்த அனைவருக்கும் பிடித்த பாடலான கண்ணான கண்ணே பாடலைப் பாடினேன்.
எம் விருந்தினர்கள் அனைவரும் பாட்டை இரசித்து கேட்டனா.; பாராட்டினர். என் பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். என்னைப் பாராட்டி வாழ்த்தினர்.
க.அ. ஸ்ரீகாரணி,
4 A
நான் வகுப்பில் கையெழுத்துக்கு சான்றிதழ் பெற்றதற்காக எனது ஒருங்கிணைப்பாளர் பாராட்டினார். அப்பொழுது எனது அம்மா, அப்பாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்னைப் பாராட்டினார்கள். இதை என்றும் நான் மறவேன். இன்னும் எனது அம்மா, அப்பாவிற்கு பெருமை சேர்க்கும் அளவுக்கு நான் நடப்பேன். கையெழுத்து மட்டுமல்ல படிப்பிலும் நல்ல மதிப்பெண் வாங்கி நான் எனது அம்மா, அப்பாவிற்கு பெருமை சேர்ப்பேன் என நான் மகிழ்ச்சியோடு தெரிவிப்பதில் எனக்கு மிகப்பெரிய ஆனந்தம்.
ர. ரிதன் V
– A
அம்மா, அப்பா நான் ஓவியம் வரைந்ததற்குப் பாராட்டினார்கள்.
SAMYUKTA
SHIVANI.S, V-A
நான் அலகுத் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்ததால் அம்மா, அப்பா பாராட்டினார்கள்.
சு. சித்தார்த் ஆதிரையன் V – B
என்னுடைய அப்பா நான் செய்த Blue Day Project- க்கு பாராட்டினர்.
சே. லுக்மான் IV
அப்பா,
அம்மாவிடம் நான் ஆங்கில எழுத்துப் பயிற்சி நோட்டைக் காட்டினேன். அதனைப் பார்த்து விட்டு என் அப்பாவும் அம்மாவும் அழகாக இருக்கிறது என்று என்னைப் பாராட்டினார்கள்.
அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.
க. தீபிகா IV
– A
என் அம்மா, அப்பா நான் வகுப்பில் முதல் இடம் வந்ததால் என்னைப் பாராட்டினார்கள். நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன்.
SRISIVAASHINI.G.V,
V-A
என் அம்மா கடந்த வாரம் எங்கள் வீட்டிற்கு வந்த உறவினர்களிடம் நான் மரியாதையாகவும், அம்மாவிற்கு உதவியாகவும் இருந்ததற்காக என்னைப் பாராட்டினார்கள்.

Comments
Post a Comment
Your feedback