மு. சாரா தவ்ஃபீகா, III - A
எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்த பரிசு என் அம்மா வாங்கி கொடுத்த ஜென் ப்ளாக்ஸ். இதில் மரத்தால் செய்யப்பட்ட சிறு சிறு கட்டைகள் இருக்கும். அதை மூன்று மூன்றாக ஒன்றின் மேல் ஒன்று என்று அடுக்க வேண்டும். பின்பு மற்ற கட்டைகள் விழாதவாறு நடுவில் இருந்து ஒரு கட்டையை மட்டும் எடுத்து மேலே வைத்து விளையாட வேண்டும். இது எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு.
தன்வித், III – A
என் பெயர் தன்வித் நான் சரளமாக எழுதவும், வாசிக்கவும் செய்ததற்காக என் அம்மா வாங்கித் தந்த விளையாட்டு பொருள்கள் தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்த பரிசு ஆகும்.
கா. தரணிசாய்ராம், II – B
எனக்கு மிகவும் பிடித்த பரிசு:
அப்பா, அம்மா கொடுத்ததில் எனக்கு மிகவும் பிடித்த பரிசு, என் பிறந்த நாளுக்கு கொடுத்த கிரிக்கெட் மட்டை மற்றும் பந்து. அதை வைத்துக்கொண்டு என் அப்பா, அம்மா, தாத்தா மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன்.
எம். வந்தனா ஸ்ரீ III
– A
மிகுந்த மகிழ்ச்சியை தந்த பரிசு எதுவெனில், என் பிறந்த நாளைக்கு என் அம்மா மற்றும் அம்மாவின் நண்பர் தந்த பரிசு. அது விலை குறைவாக இருந்தாலும் நான் எதிர்பாராத போது என் கையில் கிடைத்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைக்கிறேன்.
நன்றி
L.S. ASMITH
எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த பரிசு:
கடந்த 3 ஆண்டுகளாக என்னுடைய பிறந்தநாள் அன்று சன்மார்க்க குருகுலம் சென்று அங்கே இருக்கும் மாணவ மாணவிகளுக்கு 3 வேளை உணவு அளித்து வருகிறாம். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி என்னை வாழ்த்தியதும், அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதே போல் என் அப்பா, அம்மா நம்மால் முடியும் வரை உன் பிறந்தநாள் அன்று சன்மார்க்க குருகுலம் போகலாம் என்று சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்த பரிசாகும்.
V.K.GOWTHAM KRISHNA
எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்த பரிசு எனது தாத்தா வாங்கிக் கொடுத்த மிதிவண்டி. சிவப்பு நிற வண்டி அதை ஓட்டி விளையாடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நானும் எனது அக்காவும் அதை ஓட்டி விளையாடுவோம்.
B.K. நேகா II
– A
மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த பரிசு:
நான் மழலையர் பள்ளி பயிலும் போது பேச்சுப் போட்டிக்கு எனக்கு கிடைத்த முதல் பரிசாக சான்றிதழ் மற்றும் கேடயம் எனக்கு மிகவும் மகழ்ச்சியைத் தந்தது. என் பெற்றோர் என்னை பாராட்டினர். அந்த நிகழ்வு நெகிழ்ச்சியைத் தந்தது.
சு.ரா. சர்விந் IV – B
எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்த பரிசு ரோபோட் ஆகும். எனக்கு அந்த பரிசை என் பெற்றோர் வாங்கி கொடுத்தார்கள். அது சிகப்பு நிறத்தில் இருக்கும். அது மிகவும் அழகாக இருக்கும். நான் அதை வாங்கும் போது அது பிரிந்த நிலையில் இருந்தது. நான் அப்பாகங்களை ஒன்று சேர்த்து விளையாடினேன்.
க. தீபிகா IV – A
என் அம்மா, அப்பா நான் வகுப்பில் முதல் இடம் வந்ததால் என்னை பாராட்டினார்கள். நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன்.
மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த பரிசு எது?
எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த பரிசு Hero Pen.
இந்தப் பரிசு எனக்கு நான் முதலாம் வகுப்பில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்குச் சென்றதற்காகக் கொடுக்கப்பட்டது.
சுதந்திர தினத்தன்று இந்தப் பரிசு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
NISVANTH.S, V-B
எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்த பரிசு கடந்த முன் கல்வியாண்டில் பள்ளியில் சிறந்த வருகைப் பதிவேடு-க்கான மெடல் வழங்கியது.
சே. லுக்மான் IV
மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த பரிசு எது?
எனக்கு என் அப்பா வாங்கித் தந்த மிதிவண்டி எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அதில் அதிகமாக விளையாடுவேன்.
ர. ரிதன் V – A
மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த பரிசு எது?
எனக்கு கடவுள் கொடுத்த பரிசு என் அம்மா , அப்பா
சு. சித்தார்த் ஆதிரையன் V – B
மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த பரிசு எது?
எனது பிறந்த நாளுக்கு எனது தந்தை தந்தை பரிசு.
வி.ஸ்ரீநாத்
எனக்கு மிகவும் பிடித்த பரிசு மிதிவண்டி
எனது அம்மா என்னுடைய பிறந்தநாள் பரிசாக கிரிக்கெட் மட்டை வழங்கினார்.
எனது பாட்டி எனக்கு சதுரங்கப் பலகையை வழங்கினார்.
எனது அப்பா எனக்கு கைபேசியைப்பரிசாக வழங்கினார்.
எனது தாத்தா எனக்கு மடிக்கணினியைப் பரிசாக வழங்கினார்.
எனது சித்தி ஓவியப்புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

Comments
Post a Comment
Your feedback