Skip to main content

மகிழ்ச்சியாக என்னை நினைக்கலாம். மகிழ்ச்சியாக என்னை மறக்கலாம்.

 

 

 

பிறப்பு என்பதை மகிழ்ச்சி என்றும் மறைவு என்பதே வலி மிகுந்த இழப்பு என்றும் நம் புரிந்து கொண்டிருக்கிறோம். அதெல்லாம் நீங்கள் நினைத்துக் கொள்வதுதான் அது உண்மை அல்ல என போகிற போக்கில் சொல்கிறது இந்தப் பாட்டு

Christina Rossetti என்ற ஒரு பெண் கவிஞரால் எழுதப்பட்டது இது

மறைந்து விட்ட ஒருவர் தனக்கு ரொம்பப் பிரியமானவருக்குச் சொல்வது போல அமைந்தது இந்தப் பாடல்

அந்தப் பாட்டு சொல்வது இது தான்.

நான் மறைந்த பிறகு என்னை நினைத்து சோகப் பாடல்களோடு புலம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.

என் நினைவிடத்தில் ரோஜாச் செடிகளையோ நிழல் மரங்களையோ நட வேண்டாம்.

சிறு துளிக்கு, இடம் தரும் புல்லாக நீயே என்னைப் போர்த்திக் கொண்டிருக்கவேண்டும்.

 

(புல் மழையில் நனையும்;

சேற்றில் சிக்கும்;

வெயிலில் காயும்; கருகும்.

ஆனால் எப்போதும் இருந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கும்.

அதனால் தான் சொல்கிறேன். என் நினைவு என்னும் தரையில் நீ எதற்கும் சோர்ந்து போகாத புல்லாக இரு.)

 

நீ விரும்பினால் என் நினைவில் சுகம் பெறலாம்.

 நீ விரும்பினால் என்னை மறந்தும் அமைதி பெறலாம்

நிழலில் நான் குளிர மாட்டேன்.

மழையில் நான் நனைய மாட்டேன்.

சோக கீதம் பாடிக்கொண்டிருக்கும் குயில்களின் ஓசையை நான் கேட்க மாட்டேன்.

அழகிய காலை, அந்தி மாலை அழகில் எல்லாம் நான் மயங்கமாட்டேன்.

நீ மகிழ்ச்சியாக என்னை நினைக்கலாம்.

 நீ மகிழ்ச்சியாக  என்னை மறக்கலாம்.

 

 

 When I am dead,  my dearest,

Sing no sad songs for me;

Plant thou no roses at my head,

Nor shady cypress tree:

Be the green grass above me

With showers and dewdrops wet;

And if thou wilt, remember,

And if thou wilt, forget.

 

I shall not see the shadows,

I shall not feel the rain;

I shall not hear the nightingale

Sing on, as if in pain:

And dreaming through the twilight

That doth not rise nor set,

Haply I may remember,

And haply may forget.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...