ஜனவரி 7, 1893
மின்காந்த மின் பாய்வு, வெப்பக் காந்த விளைவுகள், ஒளியியல் குறுக்கீடுகள், வெப்பக் கடத்தல் ஆகியவற்றில் ஆய்வுகள் செய்த இயற்பியல் விஞ்ஞானி ஜோசப் ஸ்டெஃபன் இன்று காலமானார். இவர் கண்டுபிடித்த விதி ஸ்டெஃபன் போல்ட்ஸ்மான் விதி என்று குறிப்பிடப்படுகிறது.
ஜனவரி 7,1978
அண்டார்டிகாவில் முதன்முதலாக
இன்று ஒரு குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தையின் பெயர் எமிலியோ மார்கோஸ் பால்மா.
உண்மையில் அண்டார்டிகாவில் குழந்தை பெற்றுக்கொண்டு சாதனை படைக்க வேண்டும் என்றெல்லாம் அந்தக் குழந்தையின் தாய் நினைக்கவில்லை. அவரது அண்டார்டிகா பயணத்தின் போது, குறித்த காலத்துக்கு முன்பே குழந்தை பிறந்தது. இப்படியாக வந்தது தான் இந்த உலக சாதனை.
இன்றுவரை அண்டார்டிகாவில் 11 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. எந்தக் குழந்தைக்கும் எதுவும் ஆகவில்லை. எல்லாக் குழந்தைகளும் நலமுடன் இருக்கின்றன. கடுங்குளிர், மருத்துவ வசதி எதுவும் இல்லாமை என்று ஆபத்தான சூழல் நிலவிய போதும் குழந்தைகள் நலமுடன் பிறந்து நன்றாக இருக்கின்றன.

Comments
Post a Comment
Your feedback