ஜனவரி 5, 1900
சுதேசமித்திரன் நாளிதழாக வெளிவர ஆரம்பித்தது. இப் பத்திரிக்கை முதன்முதலாக ஜி.சுப்பிரமணிய ஐயரால் 1882 ஆம் ஆண்டு வார இதழாகத் துவக்கப்பட்டது.
ஜனவரி 5,1909
எவர்செட் விளைவு இன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜான் எவர் செட் என்பவர் தமிழ்நாட்டில் கொடைக்கானல் வான் ஆய்வுக்கூடத்திலிருந்து சூரியனை ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது சூரியப்புள்ளிகளைச் சுற்றி மிகப் பிரமாண்டமான வளியச் சுழல்கள் சுழன்று இயங்குவதைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு அங்கு சலவைக் கல்லில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. அவர் கண்டுபிடித்த இந்தக் கண்டுபிடிப்பு தான் அவர் பெயரில் எவர்செட் விளைவு என்று குறிப்பிடப்படுகிறது.
ஜனவரி 5,1927
கலிபோர்னியாவில் பிறந்த ஒரு அமெரிக்கர் இந்து மாதத்தில் சேர்ந்து துறவியாகி ஆன்மிக குருவாகி சரித்திரத்தில் இடம்பிடித்தார். அவர் ரொபேர்ட் ஹான்சன் என்ற இயற்பெயர் கொண்ட சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி.
அவர் இன்று தான் அமெரிக்காவில் பிறந்தார்.
இவர் "குருதேவர்" என இவரது பக்தர்களால் அழைக்கப்பட்டவர். யாழ்ப்பாணம் சிவயோக சுவாமியின் சீடர்.
ஹவாயில் கௌவாய் (kauai) தீவில் சைவ சித்தாந்த ஆதீனம் என்ற பெயரில் ஒரு கோயிலை ஆரம்பித்து "இந்து சமயம் இன்று" (Hinduism டுடே) என்ற ஆங்கில மாத இதழைத் தொடங்கி நடத்திவந்தார்.
இந்து சமயம் தொடர்பாகப் பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்.
நவம்பர் 12, 2001 அன்று ஹவாய் தீவில் இறைவனடி சேர்ந்தார்.
இவர் தொடங்கிய இந்த சிவயோக மரபில் தற்போதும் வழிபாடுகள் நடக்கின்றன. கௌவாய்(kauai) தீவில் சைவ சித்தாந்த ஆதீனம் செயல்பட்டுவருகிறது.

.jpg)
Comments
Post a Comment
Your feedback