ஜனவரி 6, 1847:
இசை மேதை தியாகராஜ சுவாமிகள் மறைந்த தினம்.
ஜனவரி 6 1852
கண் பார்வையற்றவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வதற்காக ரபிகிராபி (Raphigraphy) என்னும் புள்ளி வடிவமை எழுத்து முறையை உருவாக்கிய லூயிஸ் பிரெய்லி இன்று மரணமடைந்தார்.
லூயிஸ் பிரெய்லி பிரெஞ்சு நாட்டில் பிறந்த ஒரு பார்வையற்றவர். தான் பார்வையற்ற நிலையில் இவர் உருவாக்கிய பிரெய்லி எழுத்து முறை இன்று உலகில் உள்ள பார்வை இல்லாதவர்களையும் படிப்பாளிகளாக்கி வருகிறது.
ஜனவரி 6 1883
இலக்கிய உலகில் என்றும் நினைவு கூரப்படும் கலீல் ஜிப்ரான் இன்று தான் பிறந்தார். லெபனானில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து உலகமெங்கும் புகழ்பெற்ற கவிஞரானவர் ஜிப்ரான்.
ஜனவரி 6 1884
மரபியலின் தந்தை என்று போற்றப்படுகின்ற கிரிகோரி ஜான் மெண்டல் இன்று காலமானார்.
ஜனவரி 6 1997
கவிஞர் பிரமிள் மறைந்த நாள்.
பிரமிள் என்பது புனைபெயர். தருமு சிவராம் என்பது தான் இவர் பெயர். அதுவும் கூட அவரது உண்மையான பெயர் ஆகாது. சிவராமலிங்கம் என்ற இயற்பெயரை தருமு சிவராம் என்று மாற்றிக்கொண்டவர். இலங்கையில் பிறந்தவர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படும் இவர் தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர் என்று பலவாறு முத்திரை பதித்தவர்.
ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.


Comments
Post a Comment
Your feedback