நாட்டை ஆள்பவன் சட்டத்தின் பலத்தை மட்டும் நம்பி இருத்தல் தவறு.
ஒரு சாம்ராஜ்யத்தின் சக்திக்கு வெறும் சட்டங்கள் மட்டும் இருப்பது போதாது. அவற்றின் கடுமையைக் குறைத்து மனிதனுடைய மனதையும் அடக்குவதற்கு ஏதாவது ஒரு சாதனம் வேண்டும். எனவே ராஜ்ஜியத்தையும் மத நம்பிக்கைகளையும் குழப்பாமல் தேசிய வழக்கங்களையும் மனோ தர்மங்களையும் உருப்படுத்த வேண்டும்.
ஒரு அரசன் தன் மக்களுடைய மத விசுவாசத்தை வளர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதால் ஜனங்கள் தெய்வத்துக்கு பயந்தவர்களாக நன்னடத்தை, ஒற்றுமை முதலிய குணங்களைப் பெறுவார்கள்.
அவர்களை சட்டங்களுக்கு கீழ்ப் படியச் செய்வது எளிதாக இருக்கும்.
அரசியல்வாதிகள் மதத்தின் உண்மைகளையும் மதிப்பையும் பற்றி யோசிக்க வேண்டியது இல்லை. சில சமயம் அரசன் தனக்கே நம்பிக்கை இல்லாத மதத்துக்கு ஆதரவளிக்க வேண்டி வரும். அவன் தன் காரியங்களில் மத நம்பிக்கைகள் குறிப்பிடாதபடி மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் மதத்தையும் சட்டத்தையும் அவமதிக்கத் தொடங்கி விட்டால் ராஜ்ஜியம் அழிந்துவிடும்.
இத்தாலி அமைதி இழந்து துண்டு துண்டாகப் போய்க்கொண்டிருந்த போது தனி மனித தர்மம் வேறு அரச தர்மம் வேறு என்று போதித்தவன் மாக்யவல்லி.
இன்று வரை நாட்டை ஆள்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவன் எழுதிய பிரின்ஸ் என்ற உலகப் புகழ் பெற்ற புத்தகம் தான் தீர்வு.
அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தான் மேற்கண்ட செய்தி. 14 ஆம் நூற்றாண்டில் எழுதியது. இன்றும் பொருந்துவது போல உள்ளது. உண்மைகள் காலம் கடந்தவை தானே.
Comments
Post a Comment
Your feedback