ஏப்ரல் 28 1799
ஸ்ரீரங்கப்பட்டணம் ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. திப்புசுல்தான் கொல்லப்பட்டான். ஆங்கிலப் படைகள் தடுப்பார் யாருமின்றி தொடர்ந்து பல நாட்கள் ஸ்ரீரங்கப்பட்டணத்தை சூறையாடினர்.
ஏப்ரல் 28 1848
பரமசிவன், பார்வதி, இலக்குமி சரஸ்வதி என தெய்வங்களின் திருவுருவப் படங்களை ஓவியமாக வரைந்த ராஜா ரவி வர்மா திருவாங்கூரில் கிளிமானூர் என்று சிற்றூரில் இன்று தான் பிறந்தார். இவர் வரைந்த ஓவியங்கள் தான் இன்று பூஜை அறைகளிலும் பக்திக்குரிய இடங்களிலும் இடம்பெற்றுள்ளவை.
ஏப்ரல் 28, 1942தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் திருக்கழுக்குன்றத்தில் காலமானார். தமிழுக்காகவே மறு பிறவி எடுக்க விரும்பியவர். ஏடு தேடிய ஏந்தல். 87 ஆண்டுகள் வாழ்ந்த இவர் 87 நூல்களை வழங்கியுள்ளார்.

Comments
Post a Comment
Your feedback