Skip to main content

மே 1

  மே 1, 1895 

பால்டி மோரில் முதல் மின்சார ரயில் பயணிகளுக்காக விடப்பட்டது.

 மே 1,1897 

கல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.



மே 1, 1917 

சிறந்த முறையில் பொதுசேவை புரியும் பத்திரிகைகள், பத்திரிகைகளின் பல்வேறு துறைகளில் சிறந்த தொண்டாற்றியவர்கள், நாவல், நாடகம், அமெரிக்க வரலாறு, வாழ்க்கை வரலாறு, கவிதை, இசை முதலான ஆறு துறைகளிலும் சிறந்த படைப்பு ஆகியவற்றிற்காக ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கும் திட்டம் கொலம்பியா பல்கலைக்கழகத்தினால் இன்று தொடங்கப்பட்டது.

மே 1,1960 

பம்பாய் மாநிலம்  மொழி வழியாக பிரிக்கப்பட்டு   மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் இன்று உருவாக்கப்பட்டன. 



மே 1,1965 

திருச்சியில் கனரக கொதிகலன் சாலை துணை ஜனாதிபதி ஜாகிர் உசேனால் இன்று திறந்து வைக்கப்பட்டது 

மே 1,1993 

மே தினத்தை ஒட்டி இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு நகரில் ஒரு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது அந்த ஊர்வலத்துக்கு இலங்கை அதிபர் பிரேமதாசா தலைமை தாங்கி ஒரு ஜிபில் சென்றார் அப்போது நகரின் மையப்பகுதியான ஆர்மர் தேர்வில் பகல் 12 45க்கு ஊர்வலம் வந்து கொண்டிருக்கும் போது இடுப்பை சுற்றி வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு சைக்கிளில் வந்த தற்கொலை படைத் தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்தான் இதில் பிரேமதாசாவும் அவரது மெய் காவலர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

மே 1,2024

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன்,உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 

இசைக்கலைஞர் ஏவி ரமணனின் இசைக் குழுவில் பாடி வந்த உமா பின்னர் ரமணனையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

1978ல் கிருஷ்ணலீலை படத்தில் இடம் பெற்ற மோகனக்கண்ணன் என்ற பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார்.

உமா ரமணன் பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள் ...

பூங்கதவே தாழ் திறவாய்... - நிழல்கள்

ஆனந்த ராகம்... - பன்னீர் புஷ்பங்கள்

பூபாளம் இசைக்கும்... - தூரல் நின்னு போச்சு

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு... - மெல்ல பேசுங்கள்

கஸ்தூரி மானே... - புதுமைப் பெண்

நீ பாதி நான் பாதி... - கேளடி கண்மணி

ஆகாய வெண்ணிலாவே... - அரங்கேற்ற வேளை

பொன் மானே கோபம் ஏனோ... - ஒரு கைதியின் டைரி

கண்மணி நீ வர காத்திருந்தேன் - தென்றலே என்னை தொடு

ஏலேழம் குயிலே... - பாண்டி நாட்டு தங்கம்

பூத்து பூத்து குலுங்குதடி... கும்பக்கரை தங்கையா

பூங்காற்று இங்கே வந்து... வால்டர் வெற்றிவேல்

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே... - நந்தவன தேரு

அமுதே தமிழே அழகிய மொழியே... - கோயில் புறா

ஆறும் அது ஆழமில்ல... - முதல் வசந்தம்


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...