வெட்டியாகத் திரிபவன் தங்கச் சங்கிலி போட்டிருந்தாலும் அது கவரிங் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.
காசு பணம் இருப்பவன் கவரிங் நகை அணிந்தாலும் அதை தங்கம் என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள்.
பனை மரத்தடியில் நின்று பால் குடித்தாலும் அது கள் தான் என்று முடிவு செய்துவிடுவார்கள்.
உலகம் இப்படி லாஜிக் பார்த்து முடிவு செய்கிறது.
ஆனால் மாண்பமை மனிதர்களுக்கு, புல்லர்கள் (கிரிமினல்கள்) சொல்லும் பொய்மொழி மட்டும் எப்படியோ உண்மை என்றே தோன்றுகிறது.
யாரைச் சொல்கிறது இந்தப் பாடல். நீதிபதிகளையா?
அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் சொல்லும் வாக்குறுதிகளால் ஆசைகாட்டி ஏமாற்றப்படும் அப்பாவி மக்களையா?
வீணர்பூண் டாலுந் தங்கம் வெறும்பொய்யாம் மேற்பூச் சென்பார்
பூணுவார் தராப்பூண் டாலும் பொருந்திய தங்க மென்பார்
காணவே பனைக்கீ ழாய்ப்பாற் குடிப்பினும் கள்ளே யென்பார்
மாணுல கத்தோர் புல்லர் வழங்குரை மெய்யென் பாரே.
(விவேக சிந்தாமணி)
Comments
Post a Comment
Your feedback