Skip to main content

Posts

Showing posts from June, 2023

அழுகிய முட்டையும் சுவை தான்

 ஆபீசிலிருந்து வீடு திரும்பிய கணவனுக்கு ஆசை ஆசையாக காபி டம்ளரைக் கையில் கொடுத்துவிட்டு தானும் குடிக்கத் தொடங்கினாள் மனைவி. காப்பி டேஸ்ட்டாக இல்லை எனத் தோன்றியது அவளுக்கு.  அவனிடம் கேட்டாள்,"காப்பி நல்லா இருக்கா?".  "ஆமாம்" என்றான் அவன்.  மறுபடியும் வற்புறுத்திக் கேட்டாள்.  "நீங்க பொய் சொல்றீங்க, நான் வருத்தப்படுவேன்னு".  "இல்லை, நல்லாதான் இருக்கு" என்றான் அவன். "சரி  நம்பறேன். இன்னும் என்ன செய்திருந்தால் காபி இன்னும்  டேஸ்டா இருந்திருக்கும்" அவன் சொன்னான். "கொஞ்சம் தண்ணீரைக் குறைத்திருந்து கொஞ்சம் கூடுதலாகக் காப்பித்தூள் போட்டு, கூடக் கொஞ்சம் சர்க்கரையும் போட்டு இன்னும் கொஞ்சம் சூடாகவும் இருந்திருந்தால் இன்னும் டேஸ்டாக இருந்திருக்கும்". சாப்பிடும் முன் அல்லது காபி, டீ போன்றவற்றைக் குடிக்கும் முன் நாம் மனதில் ஒரு சுவையைக் கற்பனை செய்து வைத்திருப்போம். எவ்வளவுதான் தான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் நாம் நினைத்து வைத்திருக்கும் சுவை சில நேரங்களில் இல்லாமல் போய்விடும்.  அப்போது நமக்கு இரண்டு வழிகள் இருக்கும். ஒன்று,  சுவை ...

July in Science

  July in Science July 1, 1646 Differential & Integral Calculus Leibniz, was born in Germany. Leibniz made major contributions to Physics and Mathematics( Differential & Integral Calculus) July 1, 1961 Einstein’s Special theory of relativity Albert Einstein’s famous work ‘Special theory of relativity” was published. July 3, 1886 Benz - car Karl Benz(Germany) drove world’s first automobile to be powered by an internal combustion engine. It was a three wheeler car. July 3, 1928 First Colour TV World’s first Colour TV was demonstrated by John Logie Baird. July3, 1929 Dunlop Foam rubber was developed at Dunlop Laboratory in UK. July 5, 1996 First cloned sheep Dolly, the first cloned sheep was born in Scotland. July 6, 1885 Rabies medicine Louis Pasteur (France) injected the first 14 daily doses of anti-rabies vaccine. July 9, 1856 Avogadro- Law of Chemistry Avogadro( Italy) who was the first scientist to distinguish between atoms and molecu...

'உ' வில் தான் இதுவும் தொடங்கியது ...

பெரிய புராணத்தின் முதல் பாடல்- 'உலகெலாம் உணர்ந்து' என்று தொடங்கும்..  சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்ததாக எண்ணப்பட்டு, அதிலிருந்து வந்த வாழ்த்துப் பாடல் இது. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.  சேக்கிழார் எப்படி அந்த முதல் அடியைப் பற்றிக்கொண்டாரோ  அதே போல் தனக்கும் 'உ, து'  வை அமைத்துக் கொண்டவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். அதை ஒரு சுவாரஸ்யமான சென்டிமென்ட் என்று எடுத்துக் கொண்டாலும் சரி தான். அவர் எழுதிய நாவல்கள் மொத்தம் 115. ஒன்றிரண்டு நாவல்கள் தவிர அவரது அனைத்து நாவல்களும் 'உ' என்ற எழுத்தில் தொடங்கி 'து' என்ற எழுத்தில் முடிகின்றன. முறையான எந்தப் படிப்பும் இல்லாமல் கல்யாணம் செய்துகொடுக்கப்பட்ட கோதைநாயகியை கல்வி அறிவு தந்து ஒரு படைப்பாளியாக அறிவுலகம் போற்றும் அளவுக்கு உயர்த்தியது அவரது மாமியாரின் அதீத அக்கறை.  5 வயதில் அவருக்குத் திருமணம். கணவனுக்கு வயது அப்போது 9. எழுதப் படிக்கத் தெரியாத அவருக்கு வாய்மொழிக் கதைகள் தான் வழிகாட்டியாக இருந...

குழந்தைகளுக்கு பாடல்கள் ஏன் பிடிக்கின்றன?

  ஒரு சொல்லைப் புரிந்துகொள்ளும் முன்பாக, ஒரு மொழியைப் புரிந்துகொள்ளும் முன்பாக குழந்தையின் செவியையும் மனத்தையும் நிறைப்பவை அதன் தாய் பாடும் தாலாட்டுப்பாடல்கள். அதன் இசை குழந்தையை மயக்குகிறது. உறங்கவைக்கிறது. பாதுகாப்பாக உணரவைக்கிறது. வளரும் பருவத்தில் லயமும் சந்தமும் மிகுந்த சின்னச்சின்ன சொற்களால் உருவாகும் ஓசை குழந்தையின் நெஞ்சை ஈர்க்கிறது. சந்தத்தன்மையும் இசையும் கொண்ட சொற்கள் நிரம்பியிருப்பதாலேயே, குழந்தைகளுக்குப் பாடல்கள் பிடிக்கின்றன. குழந்தைகள் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் தருணத்தில் அல்லது இரு குழந்தைகள் தமக்குள் மகிழ்ச்சியாக உரையாடிக்கொள்ளும் தருணத்தில் அவர்கள் அறியாமல் ஒருமுறை கவனித்துப் பாருங்கள்.  அவர்கள் சொற்களை அடுக்கும் வேகம்  நம்பமுடியாத அளவுக்கு இருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும். அவர்கள் விரும்புவது சொல்லின் பொருளை அல்ல. சொல்லின் அடுக்கை, சொல்லின் சந்தத்தை, சொல்லின் தாளத்தை அவர்கள் மனம் விரும்புகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.  அவர்கள் உள்ளம் ஒரு பெரிய நகைப்பெட்டிபோல அல்லது மலர்க்கூடைபோல சொற்களால் நிரம்பி வழிந்தபடி இருக்கின்றன. அவர்கள் சொற்களோடு வா...

இனி கோபம் வரும்போது...

 ஒரு கல் பிளந்து இரண்டு துண்டான பிறகு, பிளவுபட்ட அந்தப் பகுதிகள்  மீண்டும் ஒட்டிக்கொள்ளாது. அது எப்போதும் இனி ஒரே கல்லாக முடியாது. தங்கத்தை இரண்டு துண்டுகளாக்கி விட்டால் யாராவது அவற்றை எடுத்து காய்ச்சித் தட்டினால் அவை மீண்டும் ஒட்டிக்கொள்ளும். பழைய நிலையை அடைந்து விடும். தண்ணீருக்குள் அம்பு விட்டால் என்ன ஆகும்? அம்பு நுழைந்த போது இருந்த விரிசல்  அடுத்த நொடியே மறைந்து விடும். தண்ணீர் எப்போதும் போல இயல்பாகவே இருக்கும். இரண்டு பேருக்கிடையில் ஏதோ காரணத்தால் கோபம் வந்தால் அடுத்து என்னாகும் ? அந்த இரண்டு பேரும் முட்டாள்களாக இருந்தால் கோபத்தால் வந்த பிரிவு நிரந்தரமாகிவிடும். இனி அவர்கள் பழையபடி இணங்கி இருக்க முடியாது.  அது கல் பிளந்தது போல. பிளந்தால் பிளந்தது தான். சேர முடியாது. இது முட்டாள்களின் கோபம். அடுத்து சராசரி மனிதர்கள்.   அவர்கள் கோபப்பட்டால் பேசாமல் இருப்பார்கள். யாராவது வந்து அவர்களை கூட்டிவைத்தால் மறுபடியும் பழைய நிலைக்கு வந்து நண்பர்களாக இருப்பார்கள். தங்கத்தைக் காய்ச்சி, தட்டி மீண்டும் ஒன்றாக்குவது போலவாம் இவர்கள் கோபம்.  ஒரு நல்ல மனிதர் வந...

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

  நமக்குக் கிடைத்த மகிழ்ச்சி எல்லாருக்கும்   கிடைத்து,   அதனால் அவர்கள் மகிழ்ந்திருக்க, அதைப் பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தத்தை நாம் அனுபவித்திருக்கிறோமா?   நம்முடைய மகிழ்ச்சியெல்லாம் ஒரு குட்டி வட்டத்துக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. அதையே நாம் பேரானந்தமாக நினைத்துக் கொள்வதால் அதைத்தாண்டிய ஆனந்தமெல்லாம் நமக்கு விளங்குவதில்லை.   அதனால் தான் நமக்கு ஒரு இன்பம் கிடைத்தால் அது நமக்கு மட்டும் வேண்டும் என்று  நினைக்கி றோ ம்.   ஆனால் அரிதாக வெகு சிலர் தான்,  அவர்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.   தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு காமுறுவர் கற்று அறிந்தார். (திருக்குறள்) யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இந்தப் பாடலில் கூறுகிறார் திருமூலர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின் ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே. ( திருமூலர்)   அர்த்தம் புரிய   வரிகளை இடம் மாற்றிப் போட வேண்டும். ஊன்...

அகப்பொருள் இலக்கணம்

  பொருள் இலக்கணம்   அகப்பொருள் , புறப்பொருள்   என்று இருவகைப்படும் .  ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் அன்பு   உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது . இதில் ஆணைத்   தலைவன்   என்றும் பெண்ணைத்   தலைவி   என்றும் கூறுவர் . தலைவன், தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை .   அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மை கொண்டிருக்கும் . எல்லாப் பாடல்களும் தலைவன் , தலைவி , தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும் . ஒரே பாடலில் இருவர்   அ ல் ல து  மூவர் உரையாடுவது போல இருக்காது . ஒவ்வொரு பாடலுக்கும்   திணை ,  துறை   கூறப்பட்டிருக்கும் . திணை , நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும் . துறை என்பது பாடப்பெற்ற சூழலைக் குறிக்கும் . அகப்பொருள் இலக்கணம்   திணை   அடிப்படையில் அமைந்ததாகும் .   அகப்பொருள் திணைகள் ஐந்து . அவை , 1. குறிஞ்சித் திணை ...