கல்யாணக் கனவு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வரும். ஆனால் எப்படியான கனவு என்பது தான் பெண்ணுக்குப் பெண் வேறுபடும்.
அப்படி ஒரு கனவு தான் இந்தப் பெண்ணுக்கும். அந்தக் கனவை தான் தோழிப் பெண்களிடம் சொல்லுகிறாள்.
அது எங்கள் திருமணப் பந்தல். என்னைத் திருமணம் செய்து கொள்ள இருக்கிற மாப்பிள்ளை திருமணப் பந்தலுக்கு வருகிறான்.
அவனை வரவேற்க அழகிய இளம்பெண்கள் நடனமாடிக்கொண்டே வாசலுக்கு வருகிறார்கள்.
அவர்கள் பளீரென ஒளிவீசும் தங்கக் கலசங்களைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் தீபங்கள் மின்னுகின்றன.
அந்த மாப்பிள்ளை யார் எனப் பார்க்கும் ஆவல் எல்லோருக்கும்!
மதுரா என்றழைக்கப்படும் வட மதுரையின் மன்னன் கிருஷ்ணன் என்கிற மதுரா கிருஷ்ணன் தான் மாப்பிள்ளை.
ஒவ்வொரு அடியாக வைத்து மணப் பந்தலுக்கு வருகிறான்.
ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் அவன் பாதம் பட்ட நிலம் அதிர்கிறது.
இதோ அவன் இந்தப் பந்தலுக்கு வந்து சேர்ந்து விட்டான்.
இனி எங்கள் கல்யாணம்.
என் கனவில் அவன் பந்தலுக்குள் நுழைவதைத் தான் கண்டேன்.
ஆண்டாள் திருமணக் கனவு இது.
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.
(நாச்சியார் திருமொழி)
Comments
Post a Comment
Your feedback