மெல்ல என்ற சொல்லும் மெள்ள என்ற சொல்லும் ஒரே பொருள் தருவதுபோல்தான் இருக்கும்.
ஆனால் இரண்டும் அடிப்படையில் பொருள் வேறுபாடு கொண்டவை.
மெல்ல – மென்மையாக (doing something softly)
மெள்ள - மெதுவாக, அமைதியாக (doing
something slowly)
என்று இரண்டுக்கும்
வேறுவேறு பொருள் உண்டு.
யான்நோக்குங் காலை
நிலன்நோக்கும், நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
நான் அவளைப் பார்த்தால்,
அவள் தரையைப் பார்க்கிறாள், நான் வேறு
எங்கேயாவது பார்த்துக்கொண்டிருக்கும்போது, என்னைப்
பார்க்கிறாள், தனக்குள் மெல்லச் சிரித்துக்கொள்கிறாள்.
பிள்ளைகள் வேகமாக ஓடினால்
மொள்ளமாப் போ ஓடாதே என்போம்.
மெள்ளப். போ தான் மொள்ளமாப் போவாக....
ஆதலால் மெதுவாகப்
போ என்று சொல்லுமிடத்து மெள்ள என்ற சொல்லையும்
மென்மையாகப் பேசு
என்று சொல்லும் போது மெல்ல என்ற சொல்லையும் பயன்படுத்துவதுதான் சரியானதாக இருக்கும்.
Comments
Post a Comment
Your feedback