ஒரு பொருளுக்கு கூடாத் தன்மைகளைக் காட்டி உருவகம் செய்வது கூடா உருவகம் ஆகும்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது- இந்த
மலருக்கு என் மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது.
(கண்ணதாசன்)
நிலவின் இயல்பு குளிர்ச்சி.
மலரின் இயல்பு மென்மை.
நிலவு நெருப்பாய் எரிவதும் மலர் முள்ளாய் மாறுவதும் இயல்புக்கு மாறானவை.
ஆனால் இங்கே நெருப்பாய் எரிகின்ற நிலவுக்கும் முள்ளாய் மாறிய மலருக்கும் ஒரு பெண் உருவகமாக அமைந்திருக்கிறாள். இவ்வாறு கூடாத் தன்மைகளைக் கூடுவதாகக் கொண்டு உருவகம் அமைவதால் இது கூடா உருவகம் ஆகிறது.
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்- நான்
கண்ணீர் வரைந்த ஓவியம்!
பகலில் தோன்றும் நிலவு -கண்
பார்வைக்கு மறைந்த அழகு
திரை மூடிய சிலை தான்- துன்பச்
சிறையில் மலர்ந்த மலர் நான்.
(கண்ணதாசன்)
இந்தப் பாடலில் வருகின்ற ஒவ்வொரு உருவகமும் கூடாத தன்மையையோ அல்லது பொருந்தாத தன்மையையோ கொண்டிருக்கிறது.
இதுவும் கூட கூடா உருவகம் தான்.
Comments
Post a Comment
Your feedback