ஒரு காட்டில் நிறைய யானைகள் இருந்தன. அவை வயலில்
மேயச் சென்றன.
அங்கே மூன்று வயல்கள் இருந்தன. அவற்றில் இந்த யானைகள்
சரிசமமாகப் பிரிந்து சென்று மேய்ந்து பசியாறின.
மேய்ந்து முடித்து அந்த யானைகள் வெளியே வந்தவுடன், அங்கே ஐந்து பாதைகள் இருந்தன. அவற்றில் இந்த யானைகள்
சரிசமமாகப் பிரிந்து சென்றன.
இந்த ஐந்து பாதைகளும், ஏழு
குளங்களைச் சென்றடைந்தன. அங்கேயும் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து குளித்தன.
அடுத்து, ஒன்பது
சோலைகள் இருந்தன. அவற்றிடையேயும் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து நடந்தன.
நிறைவாக, அவை
பல்லவர் தலைவனின் ஊருக்கு வந்தன. அங்கே
இருந்த பத்து வாசல்களின் வழியே மீண்டும் சரிசமமாகப் பிரிந்து உள்ளே நுழைந்தன.
யானைகள் மொத்தம் எத்தனை?
புனம் மூன்றில்
மேய்ந்து, வழி
ஐந்தில் சென்று,
இனமான ஏழ் குள நீர்
உண்டு, கனமான
கா ஒன்பதில் சென்று, காடவர்கோன்
பட்டணத்தில்
போவது வாசல் பத்தில்
புக்கு.
நூல்:
கணக்கதிகாரம்
பாடியவர்: காரிநாயனார்
எனவே, யானைகளின் எண்ணிக்கை 3, 5, 7, 9, 10 ஆகியவற்றால் மீதியின்றி வகுபடக்கூடிய ஓர் எண்ணாக இருக்கவேண்டும்.
அதாவது , அந்த எண் 3, 5, 7, 9, 10 ஆகிய எண்களின் மீச் சிறு பொது மடங்கு (L.C.M-Least Common Multiple).
எனவே, பல்லவர் தலைவனின் ஊருக்கு வந்த யானைகள் 630.

சிறப்பு..
ReplyDeleteகணிதத்தில்
( மீ.சி. ம)--
என்பதின்
வாழ்வியல்
பயன்பாடு..
விடை காணும் வழி
எளிதில் புரியும்
வண்ணம்
உள்ளது. நன்றி அய்யா.!