இது ஒரு கர்ணன் பரம்பரைக் கதை.
சோழ மன்னன் ஒரு நாள் விடியற் காலையில் நகர்வலம் போகிறான். அப்போது ஏற்றம் இறைக்கும் போது பாடும் ஒரு பாடல் அவன் காதில் விழுகிறது.
மோட்டு வெளி கொத்தி முல்லைச்செடி வைத்தோம்
முல்லைச் செடி பார்க்க முத்தழகி வந்தாள்
முத்தழகி தோளில் மூங்கில் வரக் கண்டோம்
மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே..
மன்னன் தாண்டிப் போய்விடுகின்றான்.
ஆனால் ,அவன் மனமோ பாதி கேட்ட இந்தப் பாட்டையே நினைத்துக் கொண்டிருக்கிறது.
மீதி அடிகள் என்னவாக இருக்கும் என்று மன்னன், கம்பன் மகன் அம்பிகாபதியிடம் கேட்க அம்பிகாபதி பாடியதாகச் சொல்லப்படும் வரிகள் இவை.
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே
வாங்கும் கதிர் வாழ்க வண்டமிழ் வாழ்க
வண்டமிழைக் கொண்டு வையமெல்லாம் வாழ்க.
இது அந்தாதியில் அமைந்த ஒரு நாட்டுப்புறப் பாடல்.
இதே பாட்டுக்கு கம்பன் பெயரிலும் ஒரு கதை இருக்கிறது.
இந்தப் பாட்டின் தாக்கத்தை பல திரைப்படப் பாடல்களில் காணலாம்.
காட்டு ராணி என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்…
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே
என்று தான்
தொடங்கும்.
அந்தப் பாடலை
சுசீலா பாடியிருப்பார்.
புல்வெளி
புல்வெளி தன்னில்
பனித்துளி
பனித்துளி ஒன்று
தூங்குது
தூங்குது பாரம்மா
அதை சூரியன்
சூரியன் வந்து
செல்லமாய்
செல்லமாய் தட்டி
எழுப்புது
எழுப்புது ஏனம்மா
என்று வைரமுத்து எழுதிய பாட்டும் இதன் தாக்கத்தில் பிறந்தது தான்.
அருமை ஐயா
ReplyDelete