அது ஒரு கதை.
கதிரவ குலத்தில் தோன்றிய பகீரதனின் முன்னோர்கள் 60,000 பேர் கபில முனிவருடைய சாபத்தினால் சாம்பலாகி நற்கதியை அடையாமல் கிடந்தனர். அவர்களுக்கு நற்கதி தர விரும்பிய பகீரதன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடுந்தவம் இயற்றி, ஆகாய கங்கையை விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்குக் கொண்டுவந்து தன் முன்னோர்களை நற்கதி அடையச் செய்தான் என்பது புராணம்.
அது முதல் கடும் உழைப்பையும், விடாமுயற்சியையும் கொண்டு ஒரு செயலைச் செய்ய முயலும் யாரையும் பகீரதனோடு ஒப்பிட்டு அவர்களின் முயற்சியை பகீரதப் பிரயத்தனம் என்று சொல்வது மரபாகிவிட்டது.
ஒவ்வொரு மரபுத் தொடருக்கும் பின்பு ஏதோ ஒரு கதை இருக்கும். அவற்றுள் சில புராணக்கதைகளும் இருக்கும். இது அதில் ஒன்று.
நீலிக் கண்ணீர் சொல்லும் நீலியும் ஒரு புராணக் கதை தான்.
திரிசங்கு சொர்க்கம் என்ற மரபுத்தொடர் சொல்லும் திரிசங்கு ஒரு புராணக் கதை தான்.
புராணப் பெயர்கள் வராத போதும் புராணங்கள் தமிழுக்கு நிறையத் தொடர்களைத் தந்துள்ளன.
மூக்கறுப்பு (நோஸ் கட் ) என்பது இராமாயணத்தில் இராவணன், சூர்ப்பனகை ஆகியோர் தொடர்புடைய ஒரு தொடர் தான்.
புராணக் கதை தெரிந்திருந்தால் தான்
நாரதர் வேலைன்னா என்ன என்று ஒரு குழந்தை கேட்கும்போது நம்மால் சொல்ல முடியும்.
இல்லாத போது "அது ஒரு தொடர் அவ்வளவு தான்" என்றோ "out of syllabus" என்றோ சொல்லிச் சமாளிக்க வேண்டி வரும்.
அல்லி ராஜ்யம்...
பிள்ளையார் சுழி...
சிதம்பர ரகசியம்...
இப்படி ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும்.
புராணக் கதைகள் தெரியவில்லை என்றால் பல தொடர்கள் அர்த்தம் புரியாதவையாகிவிடக்கூடும்.
கதைகள் இல்லாமல் மூளை வளர்ச்சியும் முழுமையாகாது.
Comments
Post a Comment
Your feedback