Skip to main content

Posts

Showing posts from February, 2024

பிப்ரவரி 29

  பிப்ரவரி 29, 1896 முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த நாள் .   பிப்ரவரி 29, 1904 உலகப் புகழ் பெற்ற    நடனக் கலைஞரான    ருக்மிணி தேவி அருண்டேல் மதுரையில் இன்று பிறந்தார் . வால்மீகி ராமாயணம் , புத்தாவதாரம் , குமார சம்பவம் , குற்றாலக் குறவஞ்சி , கண்ணப்பர் குறவஞ்சி , ஆண்டாள் முதலிய நூல்களுக்கு நடனம் அமைத்து ஒரு நடன இயக்குநராகவும் புகழ் பெற்றவர் இவர் . சூப்பர் மேன் உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான சூப்பர் மேன் பிறந்தது பிப்ரவரி 29 ஆம் நாள் தான்.

பிப்ரவரி 25

  பிப்ரவரி 25 ,1988  இந்தியாவின் முதல் ஏவுகணை பிரித்வி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் பரிசோதிக்கப்பட்டது

அந்தத் திறமை ஏன் ஆண்களுக்கு இல்லை?

  சீதை அசோகவனத்தில் சிறைப் பட்டுக் கிடக்கிறாள்.  அவள் நினைவாகவே உள்ள ராமன் துக்கப்பட்டு நிற்கிறான்.  சீதையைத் தேட வாக்குத்தந்த  சுக்கிரீவனோ மது மயக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறான்.  போதைப் பழக்கம் உள்ளவர்களிடம் அவ்வளவு தான் பொறுப்புணர்ச்சி இருக்கும் போல.  மதுக் கொண்டாட்டத்தில் ஆழ்ந்து கிடக்கும் சுக்கிரீவனுக்குப் புத்தி புகட்டப் புறப்படுகிறான் லட்சுமணன்.  நெஞ்சில் கனல் எரிய, கோபம் கொப்பளிக்க, வில்லை எடுத்துக்கொண்டு புயலாகப் புறப்பட்டு சுக்ரீவன் அரண்மனையை அடைகிறான்.  அடக்க முடியாத ஆத்திரத்தில் அவன் கோட்டைக்கதவை காலால் உதைத்து உடைத்துவிட்டு சீறிக்கொண்டு உள்ளே நுழைகிறான். கண்கள் சுக்ரீவனைத் தேடி அவனுக்கு முன்பாக விரைகின்றன. அப்போது திடீரென்று சுக்ரீவன் மனைவி தாரை தன் தோழிகளோடு எதிரே வருகிறாள்.  கொலை வெறியோடு வந்த லட்சுமணன் பெண்களை எதிரே பார்த்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறான்.    ருத்ரதாண்டவமாடும் அவன் கால்கள் நிற்பதற்கே தடுமாற, தன் வில்லை நிலத்தில் ஊன்றி அதன் ஆதரவில் நிற்கிறான்.  லட்சுமணன் நிற்கும் அந்தக் கோலத்...

வார்த்தைகளில் வசிக்கிறீர்கள்- Kahlil Gibran...On Talking

  “ எங்களுக்குப் பேச்சைப் பற்றிக் கூறு ” என்று ஒரு அறிஞன் கேட்டான் .    அவன் பதில் சொல்லத் தொடங்கினான் .    உங்கள் எண்ணங்களோடு நீங்கள் அமைதியாக இருக்க முடியாத போது தான் நீங்கள் பேசுகிறீர்கள் .   உங்கள் இதயத்தோடு தனிமையாக உங்களால் இருக்க முடியாத போது ,  நீங்கள் வார்த்தைகளில் வசிக்க ஆரம்பிக்கிறீர்கள் . வார்த்தைச் சத்தத்தால் இதயத்திலிருந்து உங்களை இடம் மாற்றுகிறீர்கள் .  அதிகமாகப் பேசிப்பேசி உங்கள் எண்ணங்களை குத்திக் கிழித்துவிடுகிறீர்கள் .  சிந்தனை ..... அது வானம்பாடி உங்கள் வார்த்தைக் கூண்டுகளில் அது சிறகை விரித்தாலும் பறக்க முடிவதில்லை .  உங்களது தனிமையோடு இருக்கப்    பயந்து கொண்டே நீங்கள்    பேசுபவர்களைத் தேடிப் போகிறீர்கள் .  மௌனத்தி ல்   உங்களின் உள்மனம் உங்களை உரித்துப் பார்க்கிறது .   அதனாலேயே தப்பித்து ஓடுகிறீர்கள் .  தமக்கே புரியாத உண்மைகளை பலர் வார்த்தைகளில் வடித்தெடுக்கிறார்கள் .   உண்மைகளைப் புரிந்துகொண்ட சிலரோ அவற...

ஆவுக்குப் பிச்சை ஆட்டுக்குப் பிடுங்கல்

யாரெல்லாம் ஆடு, மாடு வளர்க்கலாம். தனக்கென தோட்டம் இருப்பவர்கள் பசு மாடுகள் எருமைகள் இவற்றையெல்லாம் வளர்ப்பார்கள். விளைச்சல் நன்றாக இருக்கின்ற காலத்தில் கிடைக்கின்ற தீவனங்களை எல்லாம் பத்திரப்படுத்தி மேய்ச்சலுக்கு ஒன்றும் இல்லாத நாட்களில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படியாக தோட்டம், காடு இருப்பவர்கள் தங்கள் கால்நடைகளை பட்டினியில் இருந்து காப்பாற்றி பக்குவமாய் வளர்த்து விட முடியும்.  தோட்டம் எதுவும் இல்லாதவர்கள் பெரும்பாலும் வெள்ளாடு வளர்ப்பார்கள். பொதுப் பாதைகளிலும் இட்டேரி, இடைக்குறை நிலங்களிலும் உள்ள புல் புதர்களில் மேய விட்டு ஆடுகளை வளர்ப்பார்கள்.  அப்படி ஆடு வளர்க்கும் அவர்களும் பிழைக்க அப்போதெல்லாம் முட்புதர்கள் கொண்ட வாழ்வேலி எல்லா நிலத்திலும் இருக்கும். விளைச்சலுக்கு கெடுதல் தரும் பூச்சி புழுக்களைத் தின்று வாழும் குருவிகள், பறவைகள், பாம்பு, பல்லி, இவையெல்லாம் அங்கு தங்கி வாழ போக்கிடமாக இருக்கும். அந்த வேலிகள் தான் தனக்கென நிலமில்லாதவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கும் வயிறு நிரப்பும்.  எந்தத் தோட்டத்தில் வேலைக்குச் செல்வார்களோ அந்தத் தோட்டத்தில் உள்ள வே...

துணிச்சல் குருவி

  குழந்தையாக இருக்கும்போது ஒரு கரிக்குருவிப் பாடல் படித்திருப்போம்.   ஒரு கரிக்குருவி எருமையின் மேலே ஏறி உட்கார்ந்தது பார். ஓஹோ எருமை உனை விட நானே உயரம் என்றது பார். திரும்புமுன் குருவியைச் சிறுவன் ஒருவன் சென்று பிடித்தான் பார். சிக்கிய குருவி படபடவென்றே சிறகை அடித்தது பார். அவரவர் இடத்தில் அவரவர் இருந்தால் அபாயம் ஒன்றுமில்லை. அடுத்தவன் முதுகில் ஏற நினைத்தால் அதனால் வரும் தொல்லை. எவரெவர் எனினும் இதை உணர்வாரேல் என்றைக்கும் நட்டமில்லை. எருமை மேல் இருந்த அந்தக் குருவி தான் கரிக்குருவி. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்  மற்றைய எல்லாம் பிற. என்ற குறளுக்கு இந்தக் குருவி சரியான எடுத்துக்காட்டு.  திருவிளையாடற் புராணம் என்ற நூல் பரஞ்சோதி முனிவர் எழுதியது. இதில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதிலொன்று கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம். முற்பிறப்பில் பல புண்ணியங்கள் செய்தபோதும் ஒருவன் சில பாவங்களையும் செய்து விடுகிறான். அதனால் அடுத்த பிறவியில் கருங்குருவியாகப் பிறந்தான். அந்தக் குருவியை காகங்கள் மிகவும் தொந்தரவு செய்தன.  காகங்களுக்குப் பயந...

எப்போது துணிச்சல் வரும்?

 ஒவ்வொரு கோவிலின் அமைவிடம் குறித்து ஒரு வரலாறு அல்லது ஒரு கதை வழிவழியாகக் கூறப்பட்டு வரும். அந்த இடத்தில்தான் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதை சில குறிப்புகள் வழியாக கடவுள் காட்டியதாக முன்னோர்கள் கருதினர்.  அந்த நம்பிக்கையே அந்தத் தலவரலாறுகளுக்கு அடிப்படை. . அந்தக் குறிகள் பொதுவாக இயற்கையை மீறிய நிகழ்ச்சிகளாக இருக்கும். வேட்டை நாயை முயல் விரட்டிய இடம், யானையைக் கோழி விரட்டிய இடம் என்பது போன்ற கதைகளைப் படிக்கும்போது அவை வெறும் கற்பனை எனக் கருதுவோரும் உண்டு.  ஆனால் எளிய விலங்குகள் தன்னை விட பல மடங்கு வலிமையான விலங்குகளை தாக்கி விரட்டிய நிகழ்வுகளை அறிவியலாளர்கள் எழுதியுள்ளனர். பாஞ்சாலங்குறிச்சி என்றாலே வீரம் விளைந்த மண் என்று கூறுவார்கள். பாஞ்சாலங்குறிச்சி என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே கட்டபொம்மனின் வீரம் நம் மனதுக்குள் வந்து விடும். வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்து, கட்டபொம்மனின் வீரத்தைப் பட்டி தொட்டி எங்கும் பரப்பியது ஒரு காரணம். கட்டபொம்மன் கட்டிய கோட்டைக்கும் இப்படி ஒரு வரலாறு இருக்கிறது.  ஒரு வேட்டை நாய் முயலை விரட்டிக் கொண்டு சென்றது. ...