ஜனவரி 8, 1642 இத்தாலியின் புகழ்பெற்ற வானியல் அறிஞர் கலிலியோ கலிலி இன்று காலமானார். கீழே விழுகின்ற பொருட்கள் பற்றிய இயற்பியல் விதிகளை வகுத்தவர் இவர்தான். தொலைநோக்கியை வானியல் ஆய்வுக்கு முதன் முதலில் பயன்படுத்தியவரும் இவர்தான். ஜனவரி 8, 1901 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவரான பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்ட தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிறந்த நாள். ஜனவரி 8,1938 நம் நாட்டில் தயாரித்த முதல் வண்ணப் படம் வெளியான நாள் இன்று. இம்பீரியல் கம்பெனி தயாரித்த கிஸான்கன்யா என்ற முதல் வண்ணப் படம் இன்று வெளியானது. ஜனவரி 8, 1941 ஸ்கௌட் அதாவது சாரணர் இயக்கத்தை உருவாக்கிய லார்ட் பேட்டர்ன் பவுல் இன்று காலமானார். ஜனவரி 8, 1994 காஞ்சி மகாசுவாமி, காஞ்சி மகா பெரியவாள் என்று அழைக்கப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் இன்று இறைவனடி சேர்ந்தார். இவர் வழங்கிய தெய்வத்தின் குரல் என்னும் நூல் இந்து மதத் தத்துவங்களைப் பற்றிய விரிவான செய்திகளைக் கொண்டது.