மே 1, 1895 பால்டி மோரில் முதல் மின்சார ரயில் பயணிகளுக்காக விடப்பட்டது. மே 1,1897 கல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். மே 1, 1917 சிறந்த முறையில் பொதுசேவை புரியும் பத்திரிகைகள், பத்திரிகைகளின் பல்வேறு துறைகளில் சிறந்த தொண்டாற்றியவர்கள், நாவல், நாடகம், அமெரிக்க வரலாறு, வாழ்க்கை வரலாறு, கவிதை, இசை முதலான ஆறு துறைகளிலும் சிறந்த படைப்பு ஆகியவற்றிற்காக ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கும் திட்டம் கொலம்பியா பல்கலைக்கழகத்தினால் இன்று தொடங்கப்பட்டது. மே 1,1960 பம்பாய் மாநிலம் மொழி வழியாக பிரிக்கப்பட்டு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் இன்று உருவாக்கப்பட்டன. மே 1,1965 திருச்சியில் கனரக கொதிகலன் சாலை துணை ஜனாதிபதி ஜாகிர் உசேனால் இன்று திறந்து வைக்கப்பட்டது மே 1,1993 மே தினத்தை ஒட்டி இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு நகரில் ஒரு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது அந்த ஊர்வலத்துக்கு இலங்கை அதிபர் பிரேமதாசா தலைமை தாங்கி ஒரு ஜிபில் சென்றார் அப்போது நகரின் மையப்பகுத...