Skip to main content

மயங்கொலிகள் - 2

 

, , னகரப் பயன்பாடு

 

,, மூன்றும் வரும் ஒரு சொல் நண்ணினான்

 

நகரம் ()

-மொழிக்கு முதலில் எல்லா எழுத்துகளிலும் வரும்.

நன்று, நாடு, நில், நீர், நுரை, நூறு, நெல், நேற்று, நைந்து, நோய்

-நகரமெய் எப்போதும் தந்நகரத்திற்கு முன்னே வரும்.

 அதனால் -வை தந்தகரம் என்பர்.

அந்தம், தந்தி, சந்தை

-புணர்மொழிகளில் மட்டும் இரட்டும்

எந்நாடு. எந்நூல், முந்நூறு

-அனுப்புநர், பெறுநர், ஓட்டுநர்..... போன்ற சொற்களில் நகரம் இடையில் வரும்.

-ஈற்றில் நகரம்வந்த சொற்கள் முன்பு இருந்தன.  இன்று வழக்கிலில்லை.

பொருந். வெரிந்

ணகரம் ()

-மொழிக்கு முதலில் வராது

-மொழிக்கு இடையில் வரலாம்.

பணம், அணில், பூணூல், அண்மை

-ணகரம் இரட்டிக்கும்

எண்ணம், அண்ணன், கண்ணா

-ணகரம் இறுதியில் வரலாம்

விண், காண், கண்ணே

-ணகரமெய் எப்போதும் கரத்திற்கு முன்னே வரும்.  எனவே இதை டண்ணகரம் என்பர்.

தண்டனை, வண்டல், கண்டான்

னகரம் ()

-மொழிக்கு முதலில் வராது.

-மொழிக்கு இடையில் வரலாம்.

இன்மை, இனியது, பனைமடல்

-னகரம் இரட்டிக்கும்

தின்ன, பின்னம், அன்னை

-னகரம் இறுதியில் வரும்

நண்பன், வருவான், தன்

-னகர மெய் எப்போதும் றகரத்திற்கு முன் வரும்.  எனவே இதை றன்னகரம் என்பர்.

, வேறுபாடு :

அந்நாள்          -அந்த நாள்

அன்னாள்     -அத்தகையவள்

 

எந்நாள்           -எந்த நாள்

என்னாள்       -எனது நாள்

 

எந்நாடு           -எந்த நாடு, எமது நாடு

என்னாடு       -எனது நாடு, எனது ஆடு

 

முந்நூறு          -300

முன்னூறு      -முன்பு கொடுத்த நூறு

 

தந்நலம்          -தமது நலம்

தன்னலம்      -தன் நலம்

 

எந்நிலை       -எந்த நிலை, எமது நிலை

என்னிலை   -எனது நிலை

 

நகர , ணகர வேறுபாடு :

அந்நல்             -அந்த நல்ல

அண்ணல்     -தலைத்தன்மை வாய்ந்த

 

எந்நூறு            -எந்த நூறு

எண்ணூறு    -800

 

வெந்நீர்           -சுடுநீர்

வெண்ணீறு   -திருநீறு

 

ணகர, னகர வேறுபாடு :

 

அணைத்து   -தழுவி

அனைத்து     -அவ்வளவும்

 

அரண்               -கோட்டை

அரன்                 -சிவபெருமான்

 

ஆணை           -கட்டளை

ஆனை             -யானை

 

இவண்             -இப்படிக்கு, இவ்விடம்

இவன்               -சுட்டுப் பெயர்

 

ஆணி               -இரும்பு

ஆனி                  -மாதம்

 

அண்ணம்     -மேல்வாய்

அன்னம்         -பறவை

 

உணக்கு         -காயவிடு

உனக்கு           -உன் பயன்பாட்டுக்கு (For you)

 

உண்ணல்      -சாப்பிடல்

உன்னல்          -நினைத்தல்

 

ஊண்                 -உணவு

ஊன்                   -புலால்

 

கணி                  -கணக்கிடு

கனி                    -பழம்

 

உண்                  -சாப்பிடு

உன்                    -உனது

 

உண்மை        -மெய்

உன்மை          -உனது மை

 

எண்ண            -நினைக்க

என்ன               -கேள்வி

 

எவண்              -எவ்விடம்

எவன்                -எந்த ஒருவன்

 

கண்ணி          -முடிப்பு, பூ, பா

கன்னி              -மணமாகாத பெண்

 

காணம்           -கொள்ளுப் பயறு

கானம்             -காடு

 

காண்               -பார்

கான்                  -காடு

 

காணல்           -காணுதல்

கானல்             -கானல் நீர்

 

தணிகை        -மலை

தனிகை          -இளம்பெண்

 

தணி                  -அடக்கு

தனி                    -தனித்திரு

 

தண்மை         -குளிர்ச்சி

தன்மை           -இயல்பு

 

திணை            -பிரிவு, ஒழுக்கம்

தினை              -தானிய வகை

 

திண்மை        -உறுதி

தின்மை        -தீமை

 

துணி                 -தீர்மானி

துனி                   -ஊடலில் ஒருவகை

 

துணுக்கு        -சிறுசெய்தி

துனுக்கு          -நடுங்குதல்

 

நணி                  -சமீபம்

நனி                    -மிகுதி

 

நாணம்            -வெட்கம்

நானம்              -வாசனை

 

நாண்                 -கயிறு

நான்                  -தன்மை ஒருமை

 

பணி                  -தொண்டு, கட்டளை

பனி                    -பனிக்காலம்

 

பணை             -பருமன்

பனை               -ஒருவகை மரம்

 

பண்                   -பாட்டு

பன்                     -பல

 

பண்ணுதல்  -செய்தல்

பன்னுதல்      -சொல்லுதல்

 

பரண்                 -பரணி

பரன்                  -பரம்பொருள்

 

பாணம்           -அம்பு

பானம்             -குடிநீர்

 

புணை             -தெப்பம்

புனை               -செய்

 

புண்                   -காயம்

புன்                     -புல்லிய, சிறிய

 

பேண்                -காப்பாற்று, ஆதரி

பேன்                  -தலைப்பேன்

 

மணம்              -வாசம்

மனம்               -உள்ளம்

 

மணை             -உட்காரும் பலகை

மனை               -வீட்டிடம்

 

மண்                   -பூமி

மன்                     -நிலைபெற்ற , மிகுதி

 

மண்ணுதல் -கழுவுதல்

மன்னுதல்     -பொருந்துதல்

 

மாண்                -நிறை, மாண்பு

மான்                  -ஒருவகை விலங்கு

 

முரண்              -வேறுபாடு

முரன்                -வலிமை

 

வாணம்          -வெடி

வானம்            -ஆகாயம்

 

வண்மை        -வள்ளல் தன்மை

வன்மை          -வலிமை

 

, , பயன்பாடு

சிறப்பு ழகரம்

பொது ளகரம்

சிறப்பு ழகரம் இரட்டாது.

பொது ளகரம் பெருமையும் இரட்டும்.

லகரம் சாதாரணமாக அருகி இரட்டும்.

                -உள்ளம், எள்ளி, கொள்ளை

                -மெல்லிய, நல்லவன்

தனிக்குறிலையடுத்த மெய்யில் ழகரம் வராது,  ஆனால் ளகரம், லகரம் வரும்.

                எள், கள், கொல் , பல்

பெண்பால் விகுதி              -              அள், ஆள்

தொழிற் பெயர் விகுதி     -              தல், அல், கல்

தனி நெடிலையடுத்த சொற்களில் ழகரம் வரும்.

                ஆழ், ஆழி, காழ், வாழி

மூன்றன் உருபு                    -நிபந்தனைச் சொல் - லகரம் வரும்.

                கண்ணால் காண், வாயால் பேசு

                வந்தால் தருவேன் , பெய்தால் விளையும்

ழ்           -அடுத்து பிற மெய் வரலாம்

ள், ல்   -அடுத்து பிற மெய் வராது

 

, , வேறுபாடு

அலகு                  -பறவையின் மூக்கு

அளகு                 -பெட்டைக் கோழி

அழகு                 -வனப்பு

     

அலை               -நீரின் அசைவு

அளை               -துளாவு

அழை                -கூப்பிடு

 

அலி                    -பால் பிரிவற்றது

அளி                    -கொடு

அழி                     -சிதை, கெடு

 

ஆல்                    -ஆலமரம்

ஆள்                    -ஆட்சி செய், மனிதன்

ஆழ்                     -ஆழ்ந்து போ

 

இலை                -தாவர உறுப்பு

இளை               -மெலிந்து போ

இழை                -நூல், நகை, இயற்று

 

உலை                -சோற்று உலை

உளை               -பிடரிமயிர், சேறு

உழை                -வேலை செய்

 

ஒலி                     -சத்தம்

ஒளி                     -வெளிச்சம்

ஒழி                      -நாசமாக்கு, மறை

 

உலவு                  -மெதுவாய் நட

உளவு                  -உள்ளறிதல்

உழவு                  -உழவுத் தொழில்

 

கலி                      -ஒலி வகை கலித்தல்

களி                     -இன்புறு, உணவு, மண்

கழி                      -கம்பு, நீக்கு

 

காலம்               -நேரம்

காளம்               -நஞ்சு

காழம்               -தூண், மர வைரம்

 

காலி                  -வெற்றிடம்

காளி                  -கொற்றவை

காழி                  -சீர்காழி

 

கால்                   -காற்று, உடல் உறுப்பு

காள்                   -கழுதையொலி

காழி                  -(மர) வைரம்

 

கிலி                    -அச்சம்

கிளி                    -பறவை

கிழி                     -துணியைக் கிழி

 

குலவி               -கூடி மகிழ்ந்து

குளவி               -தெனீ

குழவி                -குழந்தை, அம்மிக் குழவி

 

குலை                -காய்குலை, ஈரற்குலை

குளை               -இலைத்திரள்

குழை                -நகை, மகரக்குழை

 

கூலம்               -தானியம்

கூளம்               -குப்பை கூளம்

கூழம்                -எள்

 

 கூலி                    -சம்பளம்

கூளி                   -பேய், அலகை

கூழி                    -குள்ளப்பசு

 

கோலி               -குண்டு, பண்டிகை

கோளி              -ஆல், அத்திமரம்

கோழி               -வீட்டுப்பறவை

 

கீல்                      -ஒரு வகைப் பசை

கீள்                      -உடைதல்

கீழ்                       -அடியில்

 

கொலு              -பொம்மைக் கொலு

கொளு             -பாட்டின் உறுப்பு

கொழு              -கலப்பையின் உறுப்பு

 

சூல்                     -கரு

சூள்                     -ஆணை, சூளுரை

சூழ்                      -கருது, ஆராய், சூழ்ந்துகொள்

 

தலை                 - சிரசு

தளை                 -விலங்கு (கட்டிப்போடு)

தழை                 -இலை தழை

 

தாலம்               -பனை

தாளம்              -இசையின் கால அளவு

தாழம்               -தாழம் பூ

 

தாலி                  -பொற்றாலி

தாளி                  -பனை, கொடி

தாழி                  -பெரிய பானை

 

தால்                   -நாக்கு

தாள்                   -அடி, முயற்சி

தாழ்                   -கதவடை

 

நால்                    -நான்கு

நாள்                   -தினம்

நாழ்                    -கருவம், குற்றம்

 

நாலி                   -முத்து

நாளி                  -நாய்

நாழி                   -மூங்கில், அளவு கருவி

 

பாலை             -பாலை நிலம்

பாளை             -தென்னம்பாளை

பாழை              -ஏழைபாழை (ஏதுமில்லாதவன்)

 

பால்                   -குடிப்பது, வடிவது

பாள்                   -கம்பி

பாழ்                   -வீண்

 

பொலி              -பெருகு

பொளி             -கொத்து

பொழி              -ஊற்று, சொரி

  

மலை               -பொருப்பு

மளை               -

மழை              -வான்மழை

 

முலை               -முலைப்பால்

முளை              -பயிர் முளைப்பது

முழை               -குகை

 

மூலை              -கோணம்

மூளை              -தலையில் உள்ள மூளை

மூழை               -அகப்பை

 

வலி                     -வலிமை, நோய்

வளி                    -காற்று

வழி                     -பாதை

 

வலை                -மீன்வலை

வளை               -தடி, வளைப்பது

வழை               -சுரபுன்னை

 

வாலி                 -இராமாயண வாலி

வாளி                 -அம்பு, காற்று, bucket

வாழி                 -வாழ்க

 

வாலை            -கன்னி, (வாலிபன்)

வாளை            -மீன்

வாழை             -வாழை மரம்

 

வால்                  -ஓர் உறுப்பு, தூய்மை

வாள்                  -ஆயதம், கருவி

வாழ்                  -வாழ்தல்

 

விலா                 -எலும்பு

விளா                 -ஒரு வகை மரம்

விழா                 -திருநாள்

 

விலை               -கிரயம்

விளை              -உண்டு விளைவித்தல்

விழை               -விரும்பு

 

வேலம்             -கருவேல மரம்

வேளம்             -சிறைக்களம்

வேழம்              -யானை

 

வேலை            -பணி

வேளை            -பொழுது

வேழை            -கரும்பின் வகை

 

லகர, ளகர வேறுபாடு

அவல்                -பள்ளம், உணவு

அவள்              -பெண் சுட்டுப்பெயர்

 

அலறு                -அழு

அளறு                -சேறு

 

அல்                     -இரவு

அள்                     -பெண்பால் ஒருமை விகுதி

 

அல்ல                  -எதிர்மறை பன்மை வினைமுற்று

அள்ள                 -எடுக்க

 

அல்லி               -மலர்

அள்ளி               -எடுத்து

 

அல்லல்           -துன்பம்

அள்ளல்           -சேறு

 

அகலம்            -அகன்ற, நீள அகலம்

அகளம்            -யாழின் ஓர் உறுப்பு

 

அஞ்சுவல்      -தன்மை ஒருமை வினைமுற்று

அஞ்சுவள்     -பயப்படுகிறாள்

 

அடுகலம்       -சோற்றுப்பானை

அடுகளம்      -போர்க்களம்

 

இலகு             -இலேசான

இளகு             -இளகிய, மனம் இளகிய

 

எல்                  -சூரியன்

எள்                  -எண்ணெய் வித்து

 

எல்லி                 -சூரியன்

எள்ளி                -நகையாடி

 

எல்லை            -எல்லைக்கோடு

 எள்ளை          -எள் + (இரண்டன் உருபு)

 

கல்                       -கல்மண்

கள்                      -மது, பன்மை விகுதி

 

காலை             -அதிகாலை

காளை             -எருது

 

குலம்                 -இனப்பிரிவு

குளம்                 -நீர்நிலை

 

கொல்லி         -நெருப்பு, கொல்லிமலை

கொள்ளி        -கொள்ளிக் கட்டை

 

கொல்லை    -புன் செய் நிலம்

கொள்ளை    -கொள்ளையடி

 

தவலை           -வாயகன்ற பாத்திரம்

தவளை           -இருவாழ்வி

 

துலை                -நிறை, தராசு

துளை               -துவாரம்

 

தொல்லை    -துன்பம்

தொள்ளை    -ஓட்டை

 

தொலை         -தூரம், தொலைத்தல்

தொளை         -துவாரம்

 

தோல்               -உடம்பின் தோல்

தோள்               -உடல் உறுப்பு

 

தொலி              -தோலின் சிறுபகுதி

தொளி             -சேறு

 

நலி                      -நோய்

நளி                     -செறிவு

 

நீலம்                  -ஒரு நிறம்

நீளம்                  -நீட்சி

 

பல்லி                 -உயிரினம்

பள்ளி                -பாடசாலை

 

பாலம்               -இணைப்பு

பாளம்              -வெடிப்பு

 

புல்                       -புல், பூண்டு

புள்                      -பறவை

 

புல்லி                 -தழுவி

புள்ளி                -கோலப்புள்ளி

 

புலி                      -வனவிலங்கு

புளி                     -ஒரு சுவை, புளியமரம்

 

மல்கு                 -பெருகு

மள்கு                 -குறை

 

மால்                   -மயக்கம்

மாள்                   -இறந்து போ

 

முல்லை          -பூ

முள்ளை         -முள் + (இரண்டன் உருபு)

 

வலம்                 -வெற்றி,வலப்பக்கம்

வளம்                 -செழுமை

 

வலவன்          -தேரோட்டி

வளவன்          -சோழன்

 

வல்லி                -வெற்றி

வள்ளி               -கிழங்கு, முருகன் மனைவி

 

விலங்கு          -மிருகம்

விளங்கு          -தோன்று

 

வெல்லம்      -கரும்பு, பனை வெல்லம்

வெள்ளம்      -நீர்ப்பெருக்கு

 

வேல்                  -கருவி, ஆயதம்

வேள்                  -அரசன், தலைவன்

 

 

லகர, ழகர வேறுபாடு

 

அகல்                 -நீங்கு

அகழ்                 -தோண்டு

 

இகல்                 -பகை

இகழ்                  -பழி

 

இமில்                -திமில்

இமிழ்                -ஒலி

 

இலவு              -இலவம்பஞ்சு

இழவு                 -இழப்பு

 

கலைமகள்  -வாணி

கழைமகள்   -கூத்தாடும் பெண்

 

சீல்                       -நெறி

சீழ்                       -புண் நீர்

 

புகல்                  -சொல்

புகழ்                   -பாராட்டு

 

முகில்               -மேகம்

முகிழ்               -தோன்று

 

வலித்தல்       -இழுத்தல்

வழித்தல்       -துடைத்தல்

 

மாலை             -மலர் மாலை

மாழை             -இளமை, அழகு

 

வலு                     -திறன்

வழு                     -குற்றம்

 

ளகர, ழகர வேறுபாடு

 

அளம்                 -உப்பளம்

அழம்                 -பிணம்

 

அளிதல்          -புண்படுதல்

அழிதல்           -ஒழிதல்

 

அளறு                -சேறு

அழறு               -அழுகை

 

அளித்து          -கொடுத்து

அழித்து           -சிதைத்து

 

ஆளாக்கு       -ஆளை உருவாக்கு

ஆழாக்கு        -முகத்தலளவை

 

ஆள்வார்        -ஆட்சி செய்பவர்

ஆழ்வார்        -திருமால் அடியார்

 

இள                     -மென்மையாகி

இழ                      -இழந்துவிடு

 

இளி                    -பல் இளி

இழி                     -இறங்கு

 

உளி                    -மரவேலைக் கருவி

உழி                     -பக்கம், ஏழன் உருபு

 

உளு                   -உளுத்துப் போதல்

உழு                    -ஏர் உழு

 

ஊளை              -நரி ஊளையிடும்

ஊழை              -விதி (தலைவிதி)

 

ஒளிதல்           -மறைதல்

ஒழிதல்            -அழிதல்

 

ஒளிப்பு            -ஒளிவிடல்

ஒழிப்பு             -அழிப்பு

 

களகம்             - நெற்கதிர்

கழகம்              -பயிலுமிடம்

 

களிப்பு            -மகிழ்ச்சி

கழிப்பு             -குறைப்பு

 

காளகம்          -கருமை

காழகம்          -ஆடை, கடாரம்

 

கிளவி               -சொல்

கிழவி               -முதியவள்

 

கீள்                     -தோண்டு, கோவணம்

கீழ்                       -கீழே

 

குளகு                -தழை, தழையுணவு

குழகு                 -குழந்தை, அழகு

 

குளம்பு            -குதிரையின் குளம்பு

குழம்பு             -சோறு குழம்பு

 

குளித்தல்      -நீராடுதல்

குழித்தல்       -குழியாக்குதல்

 

குளு                 -குளமை

குழு                  -கூட்டம்

 

கூளன்               -பயனற்றவன்

கூழன்               -தெளிவற்றவன்

 

கேளல்              -கேளாதே

கேழல்              -பன்றி

 

கேள்                   -சுற்றம்

கேழ்                   -நிறம்

 

சுளி                     -முகங்கோணு

சுழி                      -வட்டமிடு, நீர்ச்சுழி

 

சளி                     -தடுமம்

சழி                      -சமமாக்கு

 

சூள்வழி          -சுற்றியுள்ள வழி

சூழ்வளி          -சுழற்காற்று

 

சோளம்           -தானியம்

சோழம்           -நாடு

 

தளுக்குதல்  -மினுக்குதல்

ழுக்குதல்    -செழிப்புறுதல்

 

தெளி                 -சிதறு, தெளிவாக்கு

தெழி                  -அதட்டு, வருத்து

 

நாளம்               -நரம்பு, தண்டு

நாழம்               -வசை

 

நாள்                   -புதிது, தினம்

நாழ்                    -குற்றம்

 

பொளி             -உரி, கொத்து

பொழி              -சொரி, ஊற்று

 

விளைவு         -நெல் விளைவு

விழைவு          -விருப்பம்    

 

 

 

 

 

 

 

 

               

 

                               

 

 

 

 

 

 

 

 

 

               

 

                               

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...