1.தமிழாக்கம் தருக.
1. Learning is a treasure that will follow its
owner everywhere.
கல்வி என்னும் புதையல் கற்றவருடனே செல்லும்.
கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
2. A new
language is a new life.
புதிய மொழி புதிய வாழ்க்கை
புது மொழி என்பது புது வாழ்க்கையைப் போன்றது.
3. If you want
people to understand you, speak their language.
மக்கள் உன்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என விரும்பினால் நீ அவர்களுடைய
மொழியில் பேச வேண்டும்.
பிறர் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர் மொழியில் பேச வேண்டும்.
4. Knowledge
of languages is the doorway to wisdom.
பன்மொழியறிவு ஞானத்தின் வாயில் .
மொழிகளின் அறிவு ஞானத்தின் வழித்தடம்.
5. The limits
of my language are the limits of my world
என் மொழியின் எல்லை உன் உலகத்தின் எல்லை.
2.இலக்கிய நயம் பாராட்டுக.
முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
-கண்ணதாசன்
முன்னுரை
இப்பாடலின் ஆசிரியர் கவியரசர் கண்ணதாசன் ஆவார். இவர் திரைப்படப்பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.
மையக்கருத்து
தமிழன்னையின் சிறப்பு பற்றி
இப்பாடல் கூறுகிறது.
திரண்ட கருத்து
தமிழன்னையானவள், மூன்று சங்கங்கள் அமையக் காரணமானவள். முச்சங்கங்களிலும் நல்ல அனுபவமும், நல்ல அறிவும் கொண்ட புலவர்களை ஒன்றாகக் கூட்டியவள். அச்சங்கத்திற்குள் அளவிட முடியாத பொருள்களைக் கூட்டி, அதில் சொல்வளம் பெருக்கி சுவை மிக்க கவிதைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூடிவருமாறு புதுமைகள் எல்லாம் அமைத்த பெருமகள்.
தொடை நயம்
மோனை
முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்
சான்று :
முச்சங்கம் – முதுபுலவர்,
அச்சங்கம் – அளப்பரிய,
அற்புதங்கள் – அமைந்த
எதுகை
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மோனையாகும்
சான்று :
முச்சங்கம் – அச்சங்கம்,
அற்புதங்கள் – சொற்சங்கம்
இயைபு
கடைசி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு.
சான்று :
பெருமாட்டி – கவிகூட்டி – பொருள்கூட்டி – தமைக்கூட்டி
அணி நயம்
தமிழ் மொழியானது சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட
மொழி என்று இயல்பான வார்த்தைகளால் இப்பாடல் அமைந்துள்ளதால் இயல்பு நவிற்சியணி இடம் பெற்றுள்து.
கூட்டி என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவதால் இது சொற்பொருள் பின்வருநிலையணியும் ஆகிறது.
சந்த நயம்
ஏற்ற கருவியுடன் பாடினால் கேட்போருக்கும், பாடுவோருக்கும்
இனிமையைத் தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இப்பாடல்
சுவை நயம்
இப்பாடலில் பெருமிதச் சுவை மிகுந்துள்ளது.
முடிவுரை
எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, சந்தம் தாளமிட, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.
இலக்கிய நயம் பாராட்டுக.
வெட்டி யடிக்குது மின்னல் – கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம் – கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய – மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!
– பாரதியார்
முன்னுரை
இப்பாடலின் ஆசிரியர் மகாகவி பாரதியார் ஆவார். எட்டையபுரத்தில் பிறந்த அவர்
இளமையிலே கவிபாடும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார். நாட்டு விடுதலைக்காக அநேக பாடல்களைப் பாடியதால் தேசியக்கவி என்றும் அழைக்கப்பட்டார். இவரது கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் என்பன முப்பெரும் நூல்களாக மிகவும் சிறப்புப் பெற்றவையாகும்.
திரண்ட கருத்து
பளிச்சென்ற வெளிச்சத்துடன் பூமியை நோக்கி மின்னல்
அடிக்கிறது. சூறாவளிக் காற்று அடிப்பதால் விண்ணத்தொடும் அளவிற்கு கடலலையானது பொங்குகின்றது. மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி உண்டாக்கும் ஓசை இடியாய் ஒலிக்கிறது. “கூகூ” என்ற ஓசையுடன் காற்று வேகமாக வீசி விண்ணைக் குடைகிறது. மத்தளங்கள் இசைத்து தாளம் போடுவது போல மழைத்
துளிகள் மண்ணில் விழுகின்றன. ‘சடச்சட‘வென இடைவிடாமல் மழையைப் பொழிகிறது வானம். எட்டுத்திசையும் இடியின் ஓசை கேட்க மழை அழகாகப் பூமியை வந்தடைந்தது.
தொடை நயம்
மோனை
முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்
சான்று
:
வெட்டியடிக்கும்
– வீரத்திரை
எட்டுத்திசையும்
– எங்ஙனம்
எதுகை
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
சான்று :
வெட்டியடிக்கும் – எட்டுத்திசையும்,
சட்டசட – தொட்டி
அணி நயம்
மழையின் சிறப்பை உணர்த்த இடி இடித்தல், மின்னல் வெட்டுதல், காற்று வீசுதல் ஆகிய நிகழ்வுகளை எல்லாம் உயர்வுபடுத்திக் கூறியுள்ளதால் இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது.
சொல் நயம்
பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியிருக்கும் சொற்களின் ஒலிக்குறிப்புகளும் பொருளும் ஒரு பெரும் புயலை நம் கண்முன் காட்டுகின்றன. புதிய ஒலி இன்பத்தையும், புதிய பொருள் உணர்ச்சியையும் பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார்
சந்த நயம்
ஏற்ற இசைக் கருவியுடன் இசைத்துப் பாடினால் கேட்போருக்கும், பாடுவோருக்கும் இனிமையைத் தரும் விதத்தில் தாள நயத்துடன் பாரதியார் இப்பாடலை பாடியுள்ளார்.
இப்பாடல் சிந்துப் பா வகையை சார்ந்ததாகும்.
முடிவுரை
எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை , சந்தம் , சுவைபட, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.
இலக்கிய நயம் பாராட்டுக.
பிறப்பினால் எவர்க்கும்
– உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில்
– நல்ல
செய்கை வேண்டுமப்பா!
நன்மை செய்பவரே
– உலகம்
நாடும் மேற்குலத்தார் !
தின்மை செய்பவரே
– அண்டித்
தீண்ட ஒண்ணாதார்
!
– கவிமணி தேசிக விநாயகம்
ஆசிரியர் குறிப்பு
இப்பாடலினை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம். இவரின் பெற்றோர் சிவதாணு – ஆதிலட்சுமி அம்மையார் ஆவர். ஆசியஜோதி, மலரும் மாலையும் போன்றவை இவர் இயற்றிய நூல்களாகும்.
திரண்ட கருத்து
மனிதனுக்கு பிறப்பால் புகழ் வராது. சிறப்பான பகழ் வரவேண்டுமெனில் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்பவரை உலகம் நாடும், தீமை செய்பவரை உலகம் ஒதுக்கி விடும்.
தொடை நயம்
மோனை
முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்
சான்று
:
நன்மை
– நாடும்,
தின்மை
– தீண்ட
எதுகை
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
சான்று :
நன்மை – தின்மை,
சிறப்பு – பிறப்பினால்
இயைபு
இறுதி எழுத்தோ, ஓசையோ ஒன்றி வரத்தொடுப்பது இயையு
சான்று :
வாராதப்பா – வேண்டுமப்பா,
மேற்குலத்தார் – ஒண்ணாதார்
அணி நயம்
இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது
முடிவுரை
எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை , சந்தம், அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.
இலக்கிய நயம் பாராட்டுக.
பூமிச்சருகாம் பாலையை
முத்துப்பூத்த கடல்களாக்குவேன்
புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்
புதிய தென்றலாக்குவேன்
இரவில் விண்மீன் காசினை – செலுத்தி
இரவலரோடு பேசுவேன்!
இரவெரிக்கும் பரிதியை
– ஏழை
விறகெரிக்க வீசுவேன்
– நா. காமராசன்
ஆசிரியர் குறிப்பு
நா.காமராசன் 1942-ல் தேனி மாவட்டத்தில் பிறந்தவர். கவிஞர், பாடலாசிரியர், பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவர்.
திரண்ட கருத்து
பாலைவனம் போல் காட்சியளிக்கும் பூமியை முத்துப் பூத்த கடல் போல் ஆக்குவேன். புயலைக் கூறுபடுத்தி தென்றல் ஆக்குவேன். இரவில் விண்மீனைக்
காசாக்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பேன். சுட்டெரிக்கும் சூரியனை வீட்டுக்கு விறகு
எரிக்கப் பயன்படுத்துவேன்.
மோனை
முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்
சான்று
:
புயலை
– புதிய,
இரவில்
– இரவலரோடு – இரவெரிக்கும்
எதுகை
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
சான்று :
இரவில் – இரவலரோடு – இரவெரிக்கும்
இயைபு
இறுதி எழுத்தே ஒசையோ ஒன்றி வருவது இயைபு
சான்று :
கடலகளாக்குவேன் –
தென்றலாக்குவேன் – பேசுவேன் –
வீசுவேன்
அணி நயம்
பாலை
நிலத்தை பூமிச் சருக்காகவும், விண்மீனைக் காசாகவும் உருவாக்கப்படுத்தியுள்ளதால் இதில்
உருவாகஅணி பயின்று வருகிறது.
கற்பனை நயம்
புயலைக் கூறுபடுத்திப்பார்க்கும்
கவிஞரின் கற்பனை அதைத் தென்றலாக மாற்றி புதிய பார்வையைத் தருகிறது.
புயலைக் கூறுபடுத்தியே –
கோடிப்
புதிய தென்றலாக்குவேன்.
முடிவுரை
எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை, சந்தம், அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.
இலக்கிய நயம் பாராட்டுக.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்.
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்.
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.
– திரிகூட ராசப்பக் கவிராயர்
திரண்ட கருத்து
ஆண்குரங்குகள் பல வகையான பழங்களைப் பறித்து பெண் குரங்களுக்குக் கொடுக்கின்றன. அவற்றுள் சில பழங்கள் பெண் குரங்குகளின் கையிலிருந்து நழுவி விழுகின்றன. அந்தப் பழங்களை தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் ‘வா’வென்று அவர்களைக் கண்களால் அழைக்கின்றனர். வானத்தில் உள்ள சித்தர்கள் இந்த மலைக்கு இறங்கிவந்து சித்து விளையாட்டுகள் செய்துகொண்டிருப்பர். தேனருவியின் அலை மேலே எழும்பி வானத்திலிருந்து ஒழுகும். அதனால் சூரியன் தேர் வழுக்கி இடம் பெயர்ந்து செல்லும். கூன் விழுந்த பிறைநிலாவைச் சூடியிருக்கும் குற்றாலநாதர் இருக்கும் மலையான எங்கள் மலைதான் எவ்வளவு அழகு!.
தொடை நயம்
மோனை
முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்
சான்று
:
கானவர்கள்
– கமன சித்தர்,
கூனலிளம்
– குற்றாலம்
எதுகை
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
சான்று :
வானரங்கள் – கானவர்கள் – தேனருவித் – கூனலிளம்
இயைபு
இறுதி எழுத்தோ ஒசையோ ஒன்றி வருவது இயைபு
சான்று :
கொஞ்சும் –
யொழுகும் – வழுகும்
அணி நயம்
இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி அமைந்துள்ளது.
சான்று
: மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கற்பனை நயம்
தேனருவியின் அலைகள் சிந்தும் நீரில் சூரியனின் தேர்ச்சக்கரங்கள் வழுக்குகின்றன என்பது எண்ணி எண்ணி இன்புறத்தக்க அழகான கற்பனை..
சான்று
:
தேனருவித் திரையெழும்பி வானின் வழியொழுகும் செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்.
முடிவுரை
எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை, சந்தம், அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.
.
3. தமிழாக்கம் தருக.
The Serious dearth of library facilities in this country is
scarcely keeping with India’s status in the international community of nations
or with her educational and social needs. In this matter. India compares
unfavourably not only with other independent Dominions of the commonwealth but
even with certain British colonies. She possesses only one public library on
any considerable size, and even this institution is inadequate to serve the
need of the capital city. Only a few towns can boast of possessing any library
at all. The rural population is completely neglected; There are no travelling
libraries to reach them of kind that are to be found even in some backward
countries. The growth of libraries has lagged. Far behind the increase in the
number of schools and the rise in the rate of literacy. The great mass of the
people in India do not have the means to buy books or even magazines and
newspapers; in the absence of sufficient public libraries and reading room,
most of them cannot attain regular reading habits.
இந்திய நாட்டில் நூலக வசதிகளின் பற்றாக்குறையால் கல்வி மற்றும் சமூக தேவைகளில் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்தே உள்ளது. இந்திய விஷயத்தில் இந்தியா, சில பொதுவுடைமை நாடுகள் மற்றும் ஆங்கிலக் குடியேற்ற நாடுகளோடு எதிர்மறையாக ஒப்பிடப்படுகிறது. பெரிய அளவில் ஒரே ஒரு பொதுநூலகத்தை மட்டுமே இந்தியா வைத்திருக்கிறது. மேலும், அது தலைநகரத்தின் தேவையை நிறைவு செய்யப் போதுமானதாக இல்லை. இங்கு ஒருசில நகரங்கள் மட்டுமே நூலகத்தால் பெருமை அடைய இயலும். கிராமப்புற மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.சில பின் தங்கிய நாடுகளில் உள்ள அளவு கூட இங்கு பயண நூலகங்கள் இல்லை.
பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் கல்வியறிவு விகிதம் உயர்வு ஆகியவற்றில் இந்தியா மிகவும் பின்தங்கியிருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும் திரளான மக்களுக்கு புத்தகங்கள் அல்லது பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள் கூட வாங்குவதற்கு வசதி இல்லை. போதுமான பொது நூலகங்கள் மற்றும் வாசகசாலை இல்லாததால், பலருக்கு வாசிப்புப் பழக்கம் இல்லை.
தமிழாக்கம் தருக.
Periyar was not only a great social revolutionary; he was something
more than that. He is known as a great champion of the underprivileged; even in
this sphere he was much more than that. His sphere of activity was very wide
and when he took up any issue he went deep into it, understood all the aspects
of it and did not rest until he had found a permanent solution to it. Communal
differences in our society were deep-tooted and appeared to be permanent
features of our society until Periyar came on the scene.
தமிழாக்கம்
பெரியார் சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்லாமல், அதையும் தாண்டி அவரிடம் பல சிறப்புகள் உள்ளன. அவர் பிற்படுத்தப்பட்டோர்க்காகப் போராடி வெற்றி கண்டவர். அது மட்டுமல்லாமல் அவருடைய செயல்கள் தொலைநோக்குப் பார்வை கொண்டவை. எந்தப் பிரச்சனைக்கும் அவர் குரல் கொடுத்தார். அதனை ஆராய்ந்து புரிந்த பின் அதற்கான நிரந்தர தீர்வையும் கண்டுபிடித்து நிறைவேற்றினார். பெரியாரின் வருகைக்கு முன்னர் சாதிகளுக்கு இடையே வேற்றுமை நம் சமூகத்தில் பரவி இருந்தது.
தமிழாக்கம் தருக.
A White woman, about 50 years old, was seated next to a black
man. Obviously disturbed by this, she called the air hostess. “Madam, what is
the matter?” the hostess asked. “You placed me next to a black man. Give me an
alternative seat”. The hostess replied. “Almost all the places on this flight
are taken. I will go to see if another place is available. The hostess went
away and came back a few minutes later. “Madam, just as I thought, there are no
other available seats in the economy class. We still have one place in the
first class”.
Before the woman could say anything, the hostess continued. “It
would be scandalous to make someone sit next to someone so disgusting”. She
turned to the black guy and said, “ Sir, a seat awaits you in the first class”.
At the moment, the other passengers who were shocked by what they had just
witnessed stood up and applauded. Take a lesson from the sun who shines his
light on everyone. Or the rain that falls on every single shore. No distinction
of our race or the colour of our face. Nature’s gifts are there for all men rich
or poor.
தமிழாக்கம்
ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பு நிற (நீக்ரோ) மனிதன் அருகே அமர்ந்திருந்தாள். இதனால் வெறுப்புற்ற அவள், விமான பணிப்பெண்ணை அழைத்து, தமக்கு வேறு இருக்கை வேண்டும் என முறையிட்டாள். ஏறக்குறைய எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. வேறு ஏதேனும் உள்ளனவா என பார்க்கிறேன் என்று பணிப்பெண் பதிலளித்தாள். சிறு தூரம் சென்ற பணிப்பெண் ஒரு சில வினாடிகளில் திரும்பி வந்து இரண்டாம் வகுப்பில் இருக்கைகள் இல்லை. ஆனால் முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது என்றாள். அந்தப் பெண் வாய் திறக்குமுன், விமான பணிப்பெண் தொடர்ந்தாள்.
“பக்கத்தில் அமர்ந்து பயணிப்பது வெறுப்பாக உள்ளது என்பதை நானும் வெறுக்கிறேன்” என்று கூறிவிட்டு அந்த கருப்பின இளைஞனை நோக்கி, “ஐயா, உங்களுக்கு முதல வகுப்பில் ஒரு இருக்கை காத்திருக்கிறது” என்று அவனை அழைத்தாள். இதனைக் கண்ட மற்ற பயணிகள் எழுந்து நின்று அவளின் செயலைக் கண்டு கைதட்டிப் பாராட்டினார்கள். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், சூரியன், பேதமின்றி அனைவருக்கும் ஒளி தருகிறது. மழை எல்லா இடங்களிலும் பொழிகிறது. இயற்கையே இவ்வாறு பேதமின்றி தனது கொடைகளை வழங்கும்போது, இனத்தையும், நிறத்தையும் முகத்தையும் பார்த்து சக மனிதனை நாம் வெறுக்கலாமா?
தமிழாக்கம் தருக.
I make sure I have the basic good habits which include
respecting my elders, greeting people when I meet them, wishing them well when
departing etc. Other than this, observing the law, serving the poor and
downtrodden, helping the sick and needy, giving shelter to the homeless,
assisting someone with a physically challenged etc. are also other good habits
of mine. To lead on a peaceful life, I develop other good habits, writing,
listening to music, dancing, singing etc. are other such habits which fulfill
the needs of my soul.
தமிழாக்கம்
பெரியவர்களை மதிப்பது, பிறரைச் சந்திக்கும் போது வணக்கம் தெரிவிப்பது, அவர்கள் புறப்பபடும் சமயத்தில் நன்றி செலுத்துவது போன்ற நல்ல பழக்கங்கள் என்னிடம் இருப்பதை உறுதியாகச் சொல்வேன். இது தவிர, சட்டத்தை
மதித்தல், ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு சேவை புரிதல், நோயாளிகளுக்கு உதவுதல், வீடற்றவர்ககுத் தங்குமிடம் அமைத்துத் தருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவி செய்தல் போன்ற மற்ற சில நல்ல பழக்கங்களும் என்னிடம் உள்ளன. ஒரு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள நான் நல்ல பழக்கங்களை
வளர்த்துக்கொள்கிறேன். பாடல் கேட்கிறேன், நடனம் ஆடுகிறேன், எழுதுகிறேன், இசையை ரசிக்கிறேன். இது போன்ற பழக்கங்களால் என் ஆன்மாவின் தேவைகள் பூர்த்தியாகின்றன.
5. குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கணடுபிடிப்போம்.
(தமிழ் ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைபித்தன், சூடாமணி, ஜெயகாந்தன், மறைமலை அடிகள்)
1. கவிஞர்; ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம்
விடை
: கவிமணி
2. தமிழறிஞர்; முதலிரு எழுத்துக்களால் மறைக்கலாம்
விடை
: மறைமலை அடிகள்
3. தாய்மொழி; ஈற்றிரு எழுத்துக்களால் வெளிச்சம் தரும்
விடை
: தமிழ் ஒளி
4. சிறுகதை ஆசிரியர்; முதல் பாதி நவீனம்
விடை
: புதுமைப்பித்தன்
5. முன்னெழுத்து அரசன்; பின்னெழுத்து தமிழ் மாதம்
விடை
: கோதை
பத்தி அமைத்தல்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை சங்க இலக்கியங்கள். அவை இரண்டு வகைப்படும். ஒன்று எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம், அகமும் புறமும் என மூன்று வகைப்படும். நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு,கலித்தொகை ஆகிய நூல்கள் அகம் சார்ந்த நூல்களாகும்.புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்கள் புறம் சார்ந்த நூல்களாகும். பரிபாடல் அகமும் புறமும் சார்ந்த நூல் ஆகும்.
பத்துப்பாட்டு அகம், புறம் சார்ந்த நூல்கள் என இரண்டு வகைப்படும். குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை ஆகிய நூல்கள் அகம் சார்ந்த நூல்களாகும். மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகிய நூல்கள் புறம் சார்ந்த நூல்களாகும். இவற்றுள் ஆற்றுப்படை நூல்கள் ஐந்து ஆகும்.
Comments
Post a Comment
Your feedback