மயங்கொலிகள்
- 1
1.ரகர, றகரப் பயன்பாடுகள்
ர
- இடையினம், ற – வல்லினம்
ர -தனிச்சொல்லின் மெய்யீறாக வரும். (அவர், பார், இடர்)
ற -உயிர்மெய்யீறாக மட்டுமே வரும். (பேறு, களிறு, ஆறு)
ர-ஈரொற்று உடனிலையாக வரும், ற–அப்படி வராது.(பார்த்தான், தேர்ச்சி)
ர - இரட்டாது, ற – இரட்டும்.(வெற்றி, பற்று)
னகர மெய், ஆய்தத்திற்குப் பின் வருவது ற கரம். ர அங்கு வராது.(நின்றாய், அஃறிணை)
ல், ன் - மெய்களின் புணர்ச்சித் திரிபெல்லாம் ற கர மெய்யே. (கல்+ பலகை,
பொன் + குடம்)
கரம், காரம் - எழுத்துச் சாரியைகள், காரம், காரன், காரி
பின்னொட்டுக்கள், தா, வா எனும் வினைப்பகுதிகளின் திரிபுகளிலும் வருவது இடையின ரகரம்
மட்டுமே.(அகரம், ஐகாரம், அதிகாரம், வீட்டுக்காரன், வேலைக்காரி)
2.ரகர, றகர வேறுபாடு :
1. அரக்குதல்
- தேய்த்தல்
அறக்காடு
- சுடுகாடு
2. அரம் - கருவி
அறம் - நேர்மை
3. அரவம் - பாம்பு
அறவன்
- புத்தன்
4. அரவு - பாம்பு
அறவு - நீக்கம்
5. அரன் - சிவ
அறன் - அறம்
என்பதன் போலி
6. அரா - பாம்பு
அறா - நீங்காத
7. அரி -
வெட்டு
அறி -
தெரிந்துகொள்
8. அரு - அருமையான
அறு - வெட்டு
9. அருகு - பக்கம்
அறுகு - அறுகம்புல்
10. அருந்து - பருகு
அறுந்து - அறுபட்டு
11. அருவி - நீர்வீழ்ச்சி
அறிவி - அறிவிப்புக்
கொடு
12. அருவருப்பு- வெறுப்பு
அறுசுவை- ஆறுசுவை
13. அருகை - அரிய
கை
அறுகை - சிங்கம்
14. அரை - பாதி
அறை - அடி,
அரங்கு (சழழஅ)
15. ஆர - நிறைய
ஆற - தணிய
16. அலரி - பூ
அலறி - கதறி
17. ஆர்தல் - நிறைதல்
ஆறுதல் - தணிவு
18. இர - பிச்சையெடு
இற - இறந்து போ
19. இரக்கம் - கருணை
இறக்கம் - பள்ளம்
20. இரக்கை - யாசித்தல்
இறக்கை - சிறகு
21. இரங்கு - மனமிறங்கு,
வருந்து
இறங்கு - கீழிறங்கு
22. இரவு - இரவு
நேரம்
இறவு - மீன்,
முடிவு
23. இரா - இருக்காது, இரவு
இறா - மீன்
24. இரு - தங்கு
இறு - விடைசொல் (விடையிறுத்தான்), முடி
25. இருக்கு - வேதம்
இறுக்கு - கட்டு
26. இரும்பு - உலோகம்
இறும்பு - மலை,
குறுங்காடு
27. இரை - விலங்குணவு
இறை - கடவுள்
28. இரைத்தல்- நீர் இரைத்தல்
இறைத்தல்- சிந்துதல்
29. ஈர் - இரண்டு
ஈறு - இறுதி
30. உரன் - வலிமை
உறவு - சொந்தம்
31. உரவோர்- வலியோர்
உறவோர்- உறவினர்
32. உரல் - நெல்
குற்றும் கல்
உறல் - பொருந்துதல்
33. உரி - கழற்று
உறி - தயிர் உறி (தொங்கவிடப்படுவது)
34. உரிய - சொந்தமான
உறிய - உறிஞ்ச
35. உரு - வடிவம்
உறு - பொருந்து, மிகுதி (உறுபசி)
36. உரை - சொல்
உறை - தங்கு,
மூடி
37. ஊர - ஊர்ந்து போக
ஊற - நீர்
38. ஊரல் - தேமல்
ஊறல் - சாறு,
நீர் ஊற்று
39. ஊர் - வாழுமிடம்
ஊறு - துன்பம்
40. எரி - நெருப்பு
எறி - விட்டெறி
41. எருது - காளை
எறுழி - காட்டுப்பன்றி
42. ஏரல் - எறும்பு, பாம்பு, பல்லி போன தடம்
ஏறல் - ஏறதல்
43. ஏரி - நீர்நிலை
ஏறி - ஏறியமர்தல்
44. ஏர் - கலப்பை
ஏறு - காளை
45. ஒரு - ஒன்று
ஒறு - தண்டி
46. ஒருத்தல் - எருமை,
கரடி (ஆண்)
ஒறுத்தல் - தண்டித்தல்
47. கர - பதுக்கு (ஈவது கரவேல்)
கற - பீய்ச்சு ( பால் கற)
48. கரம் - கை
கறம் - வன்மம்
49. கரி - அடுப்புக்கரி, யானை
கறி - மிளகு,
50. கரு - மூலம், முட்டை
கறு - கோபம் கொள்
51. கரை - ஆற்றின்
ஓரம்
கறை - ஆடையில்
படிவது
52. கரையான்- கரைக்க
கறையான்- பூச்சி
53. கவர் - அபகரி
கவறு - சூதாடு
கருவி
54. கிரி மலை
கிறி - கரும்பு, கிறுக்கு
55. கீரி - விலங்கு
கீறி - பிறந்து
56. குரங்கு - ஒரு
விலங்கு
குறங்கு - தொடை
57. குரல் - தொண்டை
குறள் - இரண்டடிச்
செய்யுள்
58. குரு - ஆசிரியன்
குறு - குறகிய
59. குருகு - ஒரு
பறவை
குறுகு - ஒடுங்கு
60. குரம்பை - தென்னம்
பிஞ்சு, பனம் பிஞ்சு
குறும்பை- ஒரு வகை ஆடு
61. குரை - நாய்
போலக் குரை
குரை - குற்றங்குறை
62. கூரிய - கூர்மையான
கூறிய - சொன்ன
63. கூரை - வீட்டின்
கூரை
கூறை - திருமணப்
புடவை
64. கோரல் - வேண்டல்
கோரல் - கொல்லுதல்,
கொய்தல்
65. சாரு - சேரு
சாறு - பழரசம்
66. சிரை - மழி
சிறை - காவல்கொட்டம்
67. சீரிய - சிறந்த
சிறிய - கோபித்த
68. சுருக்கு - முடிச்சு
சுறுக்கு - விரைவு
69. செரி - சீரணமாக்கு
செறி - அணிந்துகொள்
70. செரு - போர்
செறு - வயல்,
கோபி
71. சொரி - உதிர்,
மொழி
சொறி - சிரங்கு
72. தரி - அணி
தறி - வெட்டு, கைத்தறி
73. தருதலை - கொடுப்பதை
தறுதலை- அடங்காதவன்
74. தருவாய் - கொடுப்பாய்
தறுவாய் - தருணம்
75. தவிர - தவிர்த்த
தவற -
76. திரள் - கூட்டம்
திறல் - வலி,
போர்
77. திரை - அலை
திறை - கப்பம்
78. துர - செலுத்து
துற - பற்றைவிடு
79. துரவு - கிணறு
துறவு - துறவறம்
80. துரை - தலைவன்
துறை - பிரிவு
81. தெருள் - அறிவுத்தெளிவு
தெறுழ் - காட்டுச்
செடி
82. தேர - ஆராய
தேற - தெளிய
83. தெரு - வீதி
தெறு - அழி
84. நருக்கு - நசுக்கு
நறுக்கு - துண்டு
85. நரை - வெண்மயிர்
நறை - தேன்
86. நாரி - பெண்
நாறி - நாற்றமெடுத்து
87. நிருத்தம் - நடனம்
நிறுத்தம் -
88. நிரை - வரிசை,
அசை
நிறை - மனவடக்கம்,
நிறுத்துதல்
89. நீர் - தண்ணீர்
நீறு - திருநீறு
90. நெரி - நசுக்கு
நெறி - வழி,
நீதி
91. பரல் - மாணிக்கப்பரல்
பறல் - பறவை
92. பரந்த - பரவிய,
விரிந்த
பறந்த - பறந்து
சென்ற
93. பரம்பு - நிலத்தைச்
சமன்செய்யும் கருவி
பறம்பு - பாரியின்
மலை
94. பரவை - கடல்
பறவை - புள்
95. பரி - குதிரை
பறி - பறித்துக்கொள், பிடுங்கு
96. பாரை - கடப்பாரை
பாறை - கற்பாறை
97. பிரை - புளித்த
மோர்
பிறை - நிலாத்
தோற்றம்
98. புரவு - ஒப்புரவு, காப்பு
புறவு - முல்லைநிலம்,
புறா
99. பெரு - பெரிய
பெறு - அடை
(பெறுதல்)
100. பொரி - பொரி(கடலை)
பொறி - இயந்திரம்,
ஐம்பொறி
101. பொருப்பு- மலை
பொறுப்பு- கடமை
102. மரம் - தரு
மறம் - வீரம்
103. மரத்தல் - உணர்ச்சியரல்
மறத்தல் - மறந்துபோதல்
104. மரி - இறந்துபோ
மறி - செம்மறியாடு
105. மரு - வாசனை
மறு - குற்றம்
106. மருகு - மருக்கொழுந்து
மறுகு - மயங்கு
107. மரை - மான்
மறை - வேதம்,
மறைத்தல்
108. முரி - ஓடி,
கெடு
முறி - தளிர்,
இலை
109. முருகு - அழகு
முறுகு - திருகு
110. முருகல் - தோசை முருகல்
முறவல் - புன்முறுவல்
111. வரம் - அருள்
வறம் - வறட்சி
112. விரகு - தந்திரம்
விறகு - அடுப்பு
விறகு
113. விரல் - கைவிரல்
விறல் - வெற்றி
, வலிமை
114. விரை - விதை,
விரைந்து போ
விறை - கடினமாகுதல்,
மரத்துப்போதல்
115. வேரல் - மூங்கில்
வேறல் - வெல்லுதல்
116. வேர் - மரத்தின்
வேர்
வேறு - வெவ்வேறு
117. வெரு - பயமுறுத்து
வெறு - பகை
Comments
Post a Comment
Your feedback