இது எழுதப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
மு அருணாசலம் தமது அன்றைய தமிழ் வசன நடையில் தருகின்ற ஓர் உதாரணம் இது.
"நண்பன் சோமுவை அன்றைக்கு டின்னருக்கு இன்வெயிட் பண்ணி இருந்தேன். பர்டிகுலரா அன்றைக்கு என் குக் ஆப்சன்ட் ஆகிவிட்டான். நான் எப்படி மானேஜ் பண்ணுவேன்? அவரும் டயத்துக்கு பங்க்சுவலா வந்துவிட்டார். வெல்கம் பண்ணாமல் என்ன செய்வது? ஹோட்டலில் இருந்து மீல்ஸ் ஆர்டர் பண்ணியிருந்தேன். ஹோட்டல்காரன் கொஞ்சம் லேட் பண்ணிவிட்டான். அதனாலே செர்வன்ட்டை அனுப்பி குய்க்கா வரச் சொன்னேன். இதுக்குள்ளே சோமுவும் நானும் எத்தனையோ சப்ஜெக்ட்ஸ் டிஸ்கஸ் பண்ணினோம்".
இவ்வாறு மேலும் ஒரு பக்கம் வரை இந்த Manyப்பிரவாளம் பேசப்படுவதை எடுத்துக்காட்டுகிறார்.
மேலும் அவர் காட்டுவன சாதாரண பேச்சு நடைக்கு உதாரணம்.
இன்வைட் பண்ணி,
மேனேஜ் பண்ணி,
ஆர்டர் பண்ணி,
வெல்கம் பண்ணி,
லேட் பண்ணி,
டிஸ்கஸ் பண்ணி,
பிரிண்ட் பண்ணி,
பப்ளிஷ் பண்ணி ,
இன்ட்ரஸ்ட் பண்ணி,
பே பண்ணி,
கிளீன் பண்ணி,
வெயிட் பண்ணி,
சர்ச் பண்ணி,
வாஷ் பண்ணி...
பதினைந்து பண்ணிகள்.!
எனவே பேச்சுத் தமிழை பண்ணித் தமிழ் என்று கூறலாமல்லவா?
இது ஒரு அர்த்தப்பூர்வமான கேள்வி!
இன்று இந்தப் பண்ணிகள் மேலும் பெருத்துவிட்டன.
ஆன் பண்ணி,
ஆப் பண்ணி,
ஸ்டார்ட் பண்ணி,
லாக் பண்ணி,
ஓபன் பண்ணி,
குளோஸ் பண்ணி...
இப்படியே பண்ணிக்கொண்டிருந்தால்
கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம்
என்று பாடியது போல...
பண்ணித்தமிழ் தந்ததொரு என்று ...
ஒரு இலக்கியம் வந்தாலும் வரும்.
Me and my son laughed together wen v read this... Funny
ReplyDelete