Skip to main content

Posts

Showing posts from February, 2023

கல்யாணக் கல்யாணக் கனவு...

 கல்யாணக் கனவு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வரும். ஆனால் எப்படியான கனவு என்பது தான் பெண்ணுக்குப் பெண் வேறுபடும். அப்படி ஒரு கனவு தான் இந்தப் பெண்ணுக்கும். அந்தக் கனவை தான் தோழிப் பெண்களிடம் சொல்லுகிறாள். அது எங்கள் திருமணப் பந்தல். என்னைத் திருமணம் செய்து கொள்ள இருக்கிற மாப்பிள்ளை திருமணப் பந்தலுக்கு வருகிறான்.  அவனை வரவேற்க அழகிய இளம்பெண்கள் நடனமாடிக்கொண்டே வாசலுக்கு வருகிறார்கள்.  அவர்கள் பளீரென ஒளிவீசும் தங்கக் கலசங்களைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார்கள்.   அதில் தீபங்கள் மின்னுகின்றன. அந்த மாப்பிள்ளை யார் எனப் பார்க்கும் ஆவல் எல்லோருக்கும்! மதுரா என்றழைக்கப்படும் வட மதுரையின் மன்னன் கிருஷ்ணன் என்கிற மதுரா கிருஷ்ணன் தான் மாப்பிள்ளை. ஒவ்வொரு அடியாக வைத்து மணப் பந்தலுக்கு வருகிறான்.  ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் அவன் பாதம் பட்ட நிலம் அதிர்கிறது. இதோ அவன் இந்தப் பந்தலுக்கு வந்து சேர்ந்து விட்டான்.  இனி எங்கள் கல்யாணம். என் கனவில் அவன் பந்தலுக்குள் நுழைவதைத் தான் கண்டேன். ஆண்டாள் திருமணக் கனவு இது. கதிரொளி தீபம் கலசமு டனேந்தி சத...

என்னையே எல்லாரும் சொல்றாங்க!

அழகாக இருக்கிறது என்று தான் அந்த மான் வேண்டும் என்று கேட்டேன். இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய தவறு தான் எல்லாத் துன்பத்துக்கும்  காரணமா? எனக்குத் தான் தெரியவில்லை அது மாய மான் என்று. ராமனுக்கு அது எப்படித் தெரியாமல் போய்விட்டது. ஆக அது ராமன் செய்த தவறு தானே! அப்படியே வைத்துக்கொண்டாலும் ஐயோ என்ற குரல் ராமனுடைய குரல் அல்ல அது போலிக் குரல் என்று லக்ஷ்மணன் சொன்ன போதும் கேட்கவில்லையே நான்.  எனக்கு சொல் புத்தியும் இல்லை; சுய  அறிவும் இல்லை என்று எல்லோரும் என்னையே குற்றம் சொல்வது போலவே தோன்றுகிறது எனக்கு. இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டே தனிமைச் சிறையில் இருக்கிறாள் சீதை. தன்  ஆதங்கம் எல்லாம் சேர கோபம் கோபமாக வருகிறது.  யாரையாவது திட்ட வேண்டும் போல இருக்கிறது. ஆனால் யாரும் இல்லாத தனிமை.  இப்படியே நேரம் போக,இரவு வந்துவிட்டது. வானத்தில் நிலா வருகிறது.  நிலாவைப் பார்த்தவுடன் அதுவும் தன்னைக் குற்றம் சொல்வது போலவே தோன்றுகிறது சீதைக்கு. உடனே கோபம் வருகிறது. "ஏய், அறிவு இல்லாத நிலவே, நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நகராமல் என்னை...

மெல்ல, மெள்ள

மெல்ல என்ற சொல்லும்   மெள்ள என்ற சொல்லும்   ஒரே பொருள் தருவதுபோல்தான்  இருக்கும்.   ஆனால் இரண்டும் அடிப்படையில் பொருள் வேறுபாடு கொண்டவை.   மெல்ல – மென்மையாக ( doing something softly )   மெள்ள - மெதுவாக , அமைதியாக ( doing something slowly )   என்று இரண்டுக்கும் வேறுவேறு   பொருள் உண்டு.   யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் , நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். நான் அவளைப் பார்த்தால் , அவள் தரையைப் பார்க்கிறாள் , நான் வேறு எங்கேயாவது பார்த்துக்கொண்டிருக்கும்போது , என்னைப் பார்க்கிறாள் , தனக்குள் மெல்லச் சிரித்துக்கொள்கிறாள்.   பிள்ளைகள் வேகமாக ஓடினால்   மொள்ளமாப் போ ஓடாதே  என்போம் . மெள்ள ப் .  போ      தான்   மொள்ளமாப் போ வாக....       கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசினால் மெல்லப் பேசு ....யாராவது கேட்டுவிடப் போகிறார்கள்  என்று சொல்லியிருப்போம் .     ஆதலால் மெதுவாகப் போ என்று சொல்லுமிடத்து   மெள்ள என்ற சொல்லையும் மென்மையாகப் பேச...

மௌனம் எனது தாய்மொழி-கூடா உருவகம்

  ஒரு பொருளுக்கு கூடாத் தன்மைகளைக் காட்டி உருவகம் செய்வது கூடா உருவகம் ஆகும். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்  நெருப்பாய் எரிகிறது- இந்த  மலருக்கு என் மேல் என்னடி கோபம்  முள்ளாய் மாறியது. (கண்ணதாசன்) நிலவின் இயல்பு குளிர்ச்சி.  மலரின் இயல்பு மென்மை. நிலவு நெருப்பாய் எரிவதும் மலர் முள்ளாய் மாறுவதும் இயல்புக்கு மாறானவை.  ஆனால் இங்கே நெருப்பாய் எரிகின்ற நிலவுக்கும் முள்ளாய் மாறிய மலருக்கும் ஒரு பெண் உருவகமாக அமைந்திருக்கிறாள். இவ்வாறு கூடாத் தன்மைகளைக் கூடுவதாகக் கொண்டு உருவகம் அமைவதால் இது கூடா உருவகம் ஆகிறது.  மயக்கம் எனது தாயகம்  மௌனம் எனது தாய்மொழி  கலக்கம் எனது காவியம்- நான்  கண்ணீர் வரைந்த ஓவியம்! பகலில் தோன்றும் நிலவு -கண்  பார்வைக்கு மறைந்த அழகு  திரை மூடிய சிலை தான்- துன்பச்  சிறையில் மலர்ந்த மலர் நான். (கண்ணதாசன்) இந்தப் பாடலில் வருகின்ற ஒவ்வொரு உருவகமும் கூடாத தன்மையையோ அல்லது பொருந்தாத தன்மையையோ கொண்டிருக்கிறது.   இதுவும் கூட கூடா உருவகம் தான்.

12 ENGLISH PROVERBS

PROVERBS Fortune favours the bold . (a) bold (b) rich (c) poor (d) friends The squeaky wheel gets the grease. (a) squirrel (b) wheel (c) machine (d) screwdriver A bad workman always blames his tools . (a) co-workers (b) time(c) tools(d) fortune Beggars can’t be choosers . (a) Poor (b) Elite (c) Elderly (d) Beggars Cowards die many times before their death . (a) birth (b) death (c) feat (d) chances Cross the stream where it is shallowest. (a) river (b) stream (c) pond (d) sea Cut your coat according to your cloth . (a) cloth (b) linen (c) court (d) need Don’t count you’re chickens before they hatch . (a) ducks (b) chickens (c) eggs (d) dumplings Don’t have too many irons in the fire. (a) fire (b) building   (c) stock (d) backyard Don’t put all your eggs in one basket . (a) plate (b) oven (c) basket (d) egg case   Every tide has its ebb . (a) flood   (b) flow   (c) ebb    (d) reflux Fools...

எங்கோ பிறந்தும் இங்கேயே வாழ்ந்தது வரலாறானவர்

வந்தது என்னவோ மதத்தைப் பரப்பத் தான் .  கிறித்துவ மிஷனரிகளால் இத்தாலியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட அவர் 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார் .  Constantine Joseph Beschi என்பது அவர் பெயர் . மதுரை வந்த அவர் காமநாய்க்கன்பட்டி வந்து தங்கினார் . மதத்தைப் பரப்ப வேண்டும் என்றால் அந்த மக்களோடு பேச பழக தமிழ் தெரிந்தால் தான் முடியும் என்பதை உணர்ந்து கொண்டார் . அதனால் சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினார் . அதன் விளைவாய் இலக்கண இலக்கியம் கற்று இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார் . மதுரைத் தமிழ் ஆசிரியரின் பெரும் திறமையும் தமிழ்ப் பாடங்களில் அவர் காட்டிய ஈடுபாடும் வியக்கத்தக்க அளவிலான தமிழ்ப் புலமைக்கு வித்திட்டன . இருபதுக்கும் மேலான தமிழ் நூல்களை அவர் எழுதினார் . தேம்பாவணி என்ற காப்பியம் அவர் இயற்றியது தான் . தமிழைத் தாய்மொழியாக கொண்டிருக்காத ஒரு வெளிநாட்டவர் இயற்றிய ஒரே தமிழ்க் காப்பியம் என்ற பெருமை கொண்டது தேம்பாவணி . தமிழோடு தன்னை மெல்ல மெல்லப் பிணைத்த...