ராமாயணத்தின் தாக்கம் கொண்ட ஒரு கவிதை இது.
தீவிரமாக
எதைப் பற்றியாவது
சிந்திப்பதுண்டா?
உண்டு. சில தேசங்களையும்
சில ஆட்சிகளையும்
பார்க்கும்போது
மீண்டும் நாங்களே
சிம்மாசனம் ஏறிவிடலாமா
என்று யோசிப்பதுண்டு.
(மு. மேத்தா)
கண்ணீர்ப் பூக்கள் தொகுப்பில் செருப்புடன் ஒரு பேட்டி என்ற தலைப்பில் உள்ள கவிதை இது.
கைகேயி கேட்ட வரம் ராமனைக் காட்டுக்கு அனுப்புகிறது. பரதனுக்கு முடி சூட்டப் போகிறார்கள்.
அரியணையில் மீண்டும் ராமனை அமர வைக்க காட்டுக்குச் சென்று வேண்டுகிறான் பரதன்.
கொடுத்த வாக்கை மீற முடியாது என்று மறுத்து விட, ராமனின் பாதுகைகளை (காலணிகள்) அரியணையில் வைத்து ராமனின் நினைவால் ஆட்சி நடக்கிறது. அது நல்லாட்சி.
அரியணையில் இருப்பது செருப்பு தான் என்றாலும் அது ராமபிரானின் பாதுகை.
இப்போதும் ஆட்சிகள் நடக்கின்றன. இந்த ஆட்சிகளின் அலங்கோலத்தை வெற்றுத் தோற்றத்தைப் பார்த்துவிட்டு ஒரு தெருவில் கிடக்கும் ஒரு சாதாரண செருப்பு சொல்கிறதாம்.
இப்படி ஒரு ஆட்சியைப் பார்க்க இந்த ஆட்சிக்கு தானே (செருப்பு) பரவாயில்லை என்று.
ராமனின் செருப்பு அர்ப்பணிப்பின் குறியீடு .
இந்தச் செருப்பு?
இது கேவலத்தின் வெளிப்பாடு.
Comments
Post a Comment
Your feedback