அவளைப் பெண் கேட்டு வந்தது அவனது சுற்றம். ஆனால் சம்மதம் சொல்ல தயங்குகின்றனர் பெண்ணின் பெற்றோர். அப்போது அவர்களிடம் அந்தப் பெண்ணின் தோழி சொல்கிறாள்.
அவன் நல்ல இடம் தான். அவன் தோட்டத்தில் விளையும் அவரைக் காய்களை பறிப்பதற்காக நிறையக் குரங்குகள் வரும். அந்தக் குரங்குகளை விரட்டும் கூச்சல் கேட்கும் தோட்டம் அது .
அவனைத் திருமணம் செய்து கொள்ள அழகும் குணமும் நிறைந்த பசு போன்ற பெண்கள் இருக்கிறார்கள். உறவு விட்டுப் போகக்கூடாது என்று தான் இவளைப் பெண் கேட்டு வந்திருக்கிறான்.
"சரி" என்று சம்மதம் சொல்வது தான் சரியானது.
ஒளிந்திருக்கும் செய்தி:
அவரைக்காய் அவனுக்குச் சொந்தம். அதை, கண்ட குரங்குகள் எல்லாம் பறிக்க விட்டுவிட்டு அவன் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான்.
அவரைக் காய் தான் அந்தப் பெண்.
இவனைத் தவிர "பெண் பார்க்கிறேன்" என்று சொல்லிக் கொண்டு வரும் பிறரெல்லாம் குரங்குகள்.
அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்,
பசுப்போல் பெண்டிரும் பெறுகுவன்;
தொல் கேள் ஆகலின், நல்குமால் இவட்கே.
(ஐங்குறுநூறு 271)
Comments
Post a Comment
Your feedback