Skip to main content

Posts

Showing posts from January, 2024

கம்பஇராமாயணம்- எத்தனை வண்ணம்

  விசுவாமித்திர ர்  இராம னி ட ம்     கூ று கி றா ர்: அகலிகையின் வரலாறு முற்காலத்தில் இவ்வாறு நிகழ்ந்தது.   நீ அவதரித்த பின்பு ,  இனி இந்த உலகு  துன்பத்தின் வழியை அடைதல் கூடுமோ ? மேகம் போன்ற கரிய திருமேனியுடைய இராமனே! அங்கு வனத்தில் மை போன்று கரிய நிறம் கொண்ட தாடகை என்னும் அரக்கியோடு செய்த போரில் , உன் கைவண்ணம் (வில்லினது ஆற்றல்) பார்த்தேன். இங்கு , கால்வண்ணம் ( அகலிகைக்கு சாபவிமோசனம்) பார்க்கிறேன் . இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் ; இனி இந்த உலகுக்கு எல்லாம் உய்வண்ணம் அன்றி , மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ ? மைவண்ணத்து அரக்கி போரில் , மழைவண்ணத்து அண்ணலே! உன் கைவண்ணம் அங்கு கண்டேன் ; கால்வண்ணம் இங்கு கண்டேன். உய்வண்ணம் – உய்யும் வழி மழை – மேகம் அண்ணல் – இராமன் பால்வண்ணம் பருவங்கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மால்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் கண்வண்ணம் அங்கே கண்டேன் கைவண்ணம் இங்கே கண்டேன் பெண்வண்ணம் நோய்கொண்டு வாடுகிறேன் (கண்ணதாசன்)

என்ன அழகு?

இராமன் மிதிலை நகரின் வீதிகள் வழியே நடந்து செல்கிறான். அவன் நடந்து செல்லும் அழகை அங்குள்ள பெண்கள் எல்லாம் பார்க்கின்றனர். ஆனால் யாருமே ராமனின் முழு உருவத்தையும் பார்க்கவில்லையாம்.   என்ன காரணம்?   ராமனின் தோளை முதலில் கண்ட பெண்கள், அவன் தோள் அழகையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வீரக் கழல் அணிந்த அவன் கால்களை முதலில் பார்த்த பெண்கள், அந்தக் காலழகையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  திடமான அவன் கைகளைப் பார்த்த பெண்கள், பார்வையை எடுக்க முடியாமல் அவன் கைகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.   இப்படி ஒவ்வொருவர் பார்வையும் ராமனின் மேனியில் முதலில் பார்த்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்ததால், எந்தப் பெண்ணும் ராமனின் முழு வடிவையும் பார்க்க முடியவில்லை.    தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார்.   கம்பன் இப்படி இராமன் அழகில் மயங்கிய பெண்களைக் காட்டினான்.    ஒரு பெண்ணின் அழகில் மய...

அடையாளம் தெரியாது

  காந்தி கண்ட ரா ம ராஜ்யத்தில்  கூனி உண்டா? உண்டு  நிமிர்ந்திருப்பாள்  யாருக்கும் அடையாளம்  தெரியாது. (தமிழன்பன்) யார் எதைச் சொல்ல நினைத்தாலும் அதற்கு குறியீடு காட்டுவதற்கும் குறிப்புப்பொருள் தருவதற்கும்  மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாக பயன்படுத்தப்பட்டிருப்பது ராமாயணம். இது தமிழன்பன் எழுதிய ஒரு புதுக்கவிதை.  புதுக்கவிதை அணி வகுப்பு என்ற நூலில் உள்ள ஒரு கவிதை இது. இந்தக் கவிதையில் என்ன இருக்கிறது? மற்றவர்களில் இருந்து தனியாகத் தெரிந்தால் தான் கூனி.  ராமாயணம் காட்டும் கூனி உடலால் மட்டும் அல்ல நல்ல எண்ணத்தாலும் கூனி, அதாவது குறுமதி கொண்டவள். அங்க அடையாளங்களைக் கண்டு "இவள் தான் கூனி" என அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்றவர்கள் போலவே நிமிர்ந்து நடமாடிக் கொண்டிருப்பவளை எப்படி அடையாளம் காண்பது? இன்று பிறர் நலன் கெடுப்போர், பிறர் சந்தேகப்படாத வகையில் இரண்டறக் கலந்துள்ள நிலை தான் இந்தக் கவிதையில் காட்டப்படுவது.  நல்லவர்களைக் கூட சில நேரம் சந்தேகப்படும் நாம் சந்தேகப்பட வேண்டியவர்களை சில நேரங்களில் முழுதாக நம்பி விடுகிறோம் கைகேயி போல. இனம் காண முடியா...

நானே பரவாயில்லை

 ராமாயணத்தின் தாக்கம் கொண்ட ஒரு கவிதை இது. தீவிரமாக  எதைப் பற்றியாவது  சிந்திப்பதுண்டா? உண்டு. சில தேசங்களையும் சில ஆட்சிகளையும்  பார்க்கும்போது மீண்டும் நாங்களே சிம்மாசனம் ஏறிவிடலாமா  என்று யோசிப்பதுண்டு. (மு. மேத்தா) கண்ணீர்ப் பூக்கள் தொகுப்பில் செருப்புடன் ஒரு பேட்டி என்ற தலைப்பில் உள்ள கவிதை இது. கைகேயி கேட்ட வரம் ராமனைக் காட்டுக்கு அனுப்புகிறது. பரதனுக்கு முடி சூட்டப் போகிறார்கள். அரியணையில் மீண்டும் ராமனை அமர வைக்க காட்டுக்குச் சென்று வேண்டுகிறான் பரதன்.  கொடுத்த வாக்கை மீற முடியாது என்று மறுத்து விட, ராமனின் பாதுகைகளை (காலணிகள்)  அரியணையில் வைத்து ராமனின்  நினைவால் ஆட்சி நடக்கிறது. அது நல்லாட்சி. அரியணையில் இருப்பது செருப்பு தான் என்றாலும் அது ராமபிரானின் பாதுகை. இப்போதும் ஆட்சிகள் நடக்கின்றன. இந்த  ஆட்சிகளின் அலங்கோலத்தை வெற்றுத் தோற்றத்தைப் பார்த்துவிட்டு ஒரு தெருவில் கிடக்கும் ஒரு சாதாரண செருப்பு சொல்கிறதாம்.  இப்படி ஒரு ஆட்சியைப் பார்க்க இந்த ஆட்சிக்கு தானே (செருப்பு) பரவாயில்லை  என்று. ராமனின் செருப்பு அர்ப்பணிப்பின் குற...