ஓர் இடத்தில் விளக்கு வைக்கப்பட்டுள்ளது என்றால், விளக்கு வைக்கப்பட்ட இடம் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கும் அந்த விளக்கு ஒளி தரும். அதுபோல, ஒரு பாடலின் குறிப்பிட்ட ஒரு சொல் அல்லது ஒரு அடி பிற இடங்களுக்கும் சென்று பொருள் தரும் என்றால் அது தீவக அணியாகும். தீவகம் என்ற சொல்லுக்கு விளக்கு (தீபம்) என்று பொருள். பழனி என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் இது. ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு சேராத செல்வம் இன்று சேராதோ? தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ? பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா அறுவடைக் காலம் உ ந் தன் திருமண நாளம்மா கைக...