கோவிலுக்குச் செல்லும் போது ஆண்டவனுக்குப் படைப்பதற்காக தேங்காய் பழம் எல்லாம் எடுத்துச் செல்கிறோம். அவை எல்லாம் நம்முடைய பக்தியைக் காட்டுவதற்காகத் தானே தவிர ஆண்டவனுக்கு நாம் செய்யும் உபகாரம் அல்ல. அப்படியிருக்க இது நடந்தால் இது செய்வேன் என்று நிபந்தனை விதித்து கடவுளுக்குக் காணிக்கை கொடுப்பது சரியா? என யோசிக்க வைக்கிறது இந்தப் பாடல். உலகத்தில் இருக்கக்கூடிய உயிர்களெல்லாம் வளர உதவியாக இருப்பது மழை. தானம் தவம் எல்லாம் நின்று நிலைத்திடச் செய்வது மழை. அந்த வானம் உனக்கு செய்த நன்றிக்கு உன்னால் என்ன திருப்பி ச் செய்துவிட முடியும்? உன்னால் மட்டுமல்ல, உலகத்தில் இருக்கும் யாரும் மழைக்கு பிரதி உபகாரம் செய்ய முடியாதே. அப்படியிருக்க, உனக்குக் கருணை காட்டி, கோடிகோடியான துன்பங்களை அகற்றி நன்மை செய்து வருகின்ற சிவபெருமானுக்கு, நீ தரும் காணிக்கை நன்றியாகி விடுமா? கூன்செய்த பிறையணியும் தண்டலையார் கருணைசெய்து கோடி கோடி யான்செய்த வினையகற்றி நன்மைசெய்தார் உபகாரம் என்னால் உண்டோ ஊன்செய்த உயிர்வளரத் தவம்தானம் வளர்ந்தேற உத...